மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே முகமது தாஜுதீன் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மதுரை காஜிமார் தெருவைச் சேர்ந்தவர் முகமது தாஜூதீன். இவர் வகுத்ததே இஸ்லாமிக் ஹிந்த் அமைப்பின் மாநில பொதுச் செயலாளராக உள்ளார். இந்தஅமைப்பைச் சேர்ந்த சிலர் தீவிரவாத இயங்களுடன் தொடர்பு வைத்துள்ளதாகவும், அது தொடர்பாகவே, மதுரையில் உள்ள முகமது தாஜுதீன் என்பவர் வீட்டில், டெல்லியில் இருந்து வந்த என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் என கூறப்படுகிறது.
மேலும், போலி ஆவணங்களை அளித்து பாஸ்போர்ட் வாங்கிய விவகாரத்திலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று தகவல் வெளியாகியுள்ளது.
சமீபகாலமாக, தமிழகத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் தொடர்புகள் அதிக அளவில் உள்ளதாக, மத்திய உளவுத்துறை அளித்த அறிக்கையின் பேரில், என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர்.