வலுவான தொழில்-கல்வி ஒத்துழைப்பை உருவாக்கும் வகையில் , புதுவை பல்கலைக்கழகம், எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மையம், புதுச்சேரி ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
புதுவை பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் பேசிய எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மையத்தின் துணைப் பொது மேலாளர் அமித் நைன், “இந்த ஒத்துழைப்பு வெறும் காகித ஒப்பந்தம் அல்ல; இது நமது மாணவர்களின் எதிர்காலத்தை வளர்ப்பதற்கும், கல்வி மற்றும் தொழில்துறைக்கு இடையேயான பிணைப்பை வலுப்படுத்துவதற்குமான ஓர் அர்ப்பணிப்பு” என்றார்.
மாணவர்களுக்குச் சான்றிதழ் படிப்புகள், தொழிற்சாலையில் (இன்டர்ன்ஷிப்) சலுகைக் கட்டணத்தில் பயிற்சி வழங்குதல், ஆய்வகங்கள் மற்றும் நூலகத்திற்கு முழுமையான அணுகல் ஆகியவற்றை வழங்குவதே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
மேலும், புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மையத்தால் வழங்கப்படும் விடுதி வசதிகள், பரஸ்பர வளப் பகிர்வு, கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முன்முயற்சிகள் மற்றும் தொழில் கல்வி தொடர்புகளை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ளன.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். இது இரு தரப்பினருக்கும், மிக முக்கியமாக, நமது தேசத்தின் மாணவர்கள் மற்றும் எதிர்கால பணியாளர்களுக்கு பயனளிக்கும் நீண்ட கால ஒத்துழைப்பை உறுதி செய்கிறது.