நவீனரக ஆயுதங்கள் வாங்குவதற்கு ரூ.23,500 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு, நாட்டின் பாதுகாப்பு மற்றும் தேச நலன் ஆகிவயற்றில் மிகுந்த அக்கரை செலுத்தி வருகிறது. ராணுவத்திற்குப் புத்துயிர் ஊட்டும் வகையில் இந்திய ராணுவம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. புதிய புதிய புதிய நவீன ஆயுதங்கள் வாங்கப்பட்டு வருகிறது.
மேலும், ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப நலன் காக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்பட்டுத்தப்பட்டு வருகின்றன. இதனால், இந்திய ராணுவத்திற்கு பாஜகவின் ஆட்சிக் காலம் பொற்காலம் என ராணுவத்தினர் பெருமை பொங்கச் சொல்லி வருகின்றனர்.
இந்த நிலையில், நாட்டை மேலும் வலிமைப்படுத்தும் வகையில் நவீனரக ஆயுதங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், அவசரக் கால ஆயுதக் கொள்முதல் திட்டத்தின் கீழ் ஆயுதங்கள் வாங்கப்பட உள்ளன.
குறிப்பாக, டிரோன்கள், ஏவுகணைகள், ரேடார் உள்ளிட்ட கண்காணிப்பு கருவிகள், தகவல் தொடர்பு சாதனங்கள், வாகனங்கள் உள்ளிட்ட நவீனரக ஆயுதங்கள் வாங்குவதற்கு ரூ.23,500 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.