அரிய புவி தனிமங்கள் தோண்டி எடுப்பதற்கான உரிமைத்தொகை விகிதங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
Sep 12, 2026, 09:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரிய புவி தனிமங்கள் தோண்டி எடுப்பதற்கான உரிமைத்தொகை விகிதங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

Murugesan M by Murugesan M
Oct 11, 2023, 08:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

லித்தியம், நியோபியம், அரிய புவி தனிமங்கள் (ஆர்.இ.இ) ஆகிய மூன்று முக்கிய கனிமங்களை சுரங்கம் தோண்டி எடுப்பதற்கான உரிமைத்தொகை விகிதங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், லித்தியம், நியோபியம், அரிய புவி தனிமங்கள் (ஆர்.இ.இ) ஆகிய 3 முக்கிய  கனிமங்களைத் தோண்டி எடுப்பதற்கான உரிமைத்தொகை விகிதத்தை நிர்ணயிப்பதற்காக சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957-ன் இரண்டாவது அட்டவணையில் திருத்தம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், 2023  அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது, இது 2023 ஆகஸ்ட் 17 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. லித்தியம், நியோபியம் உள்ளிட்ட 6 கனிமங்களை அணுக் கனிமங்கள் பட்டியலில் இருந்து நீக்கி, இந்தக் கனிமங்களுக்கான சலுகைகளைத் தனியாருக்கு ஏலம் மூலம் வழங்க இந்த சட்டத் திருத்தம் வழிவகுக்கிறது.

மேலும், லித்தியம், நியோபியம், மற்றும் ஆர்.இ.இ (யுரேனியம் மற்றும் தோரியம் இல்லாதவை) உள்ளிட்ட 24 முக்கிய கனிமங்களின் (சட்டத்தின் முதல் அட்டவணையின் பகுதி டி இல் பட்டியலிடப்பட்டுள்ளன) சுரங்க குத்தகை மற்றும் கலப்பு உரிமத்தை மத்திய அரசு ஏலம் விட இந்தத் திருத்தம் வழிவகுத்துள்ளது.

உரிமைத்தொகை விகிதத்தை வரையறுக்க மத்திய அமைச்சரவையின் இன்றைய ஒப்புதல், லித்தியம், நியோபியம் மற்றும் ஆர்.இ.இ.களுக்கான தொகுதிகளை ஏலம் விட நாட்டிலேயே முதல் முறையாக மத்திய அரசுக்கு உதவும்.

கனிமங்கள் மீதான உரிமைத்தொகை விகிதம் என்பது பிளாக்குகளை ஏலத்தில் எடுப்பவர்களுக்கு ஒரு முக்கியமான நிதி அம்சமாகும். மேலும், இந்தக் கனிமங்களின் சராசரி விற்பனை விலையை (ஏஎஸ்பி) கணக்கிடுவதற்கான வழிமுறையும் சுரங்க அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது, இது ஏல அளவுருக்களை தீர்மானிக்க உதவும்.

லித்தியம் – அடிப்படை உலோகப் பரிமாற்ற விலையில் 3%, நியோபியம் – சராசரி விற்பனை விலையில் 3% (முதன்மை  மற்றும் இரண்டாம் நிலை மூலங்களுக்கு), ஆர்இஇ – அரிய புவி ஆக்சைடின் சராசரி விற்பனை விலையில்  1% நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், தேசியப் பாதுகாப்பிற்கும் முக்கிய கனிமங்கள் இன்றியமையாதவையாக மாறியுள்ளன.

2070 ஆம் ஆண்டிற்குள் எரிசக்தி மாற்றம் மற்றும் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டைக் கருத்தில் கொண்டு லித்தியம், ஆர்.இ.இ போன்ற முக்கிய கனிமங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: PM Modicentral cabinet meeting
Share
Tweet
SendShare
Previous Post

மேலும் வலிமை பெறும் இந்தியா: நவீனரக ஆயுதங்கள் வாங்க ரூ.23,500 கோடிக்கு ஒப்பந்தம்!

Next Post

பாரத் ஹே ஹம் என்ற அனிமேஷன் தொடரின் முன்னோட்டக் காட்சியை அனுராக் தாக்கூர் வெளியிட்டார்.

Related News

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies