பாரத் ஹே ஹம் என்ற அனிமேஷன் தொடரின் முன்னோட்டக் காட்சியை அனுராக் தாக்கூர் வெளியிட்டார்.
Apr 29, 2026, 11:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரத் ஹே ஹம் என்ற அனிமேஷன் தொடரின் முன்னோட்டக் காட்சியை அனுராக் தாக்கூர் வெளியிட்டார்.

Murugesan M by Murugesan M
Oct 11, 2023, 08:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், மத்திய மக்கள்  தொடர்பகம், கிராஃபிட்டி ஸ்டுடியோஸ் ஆகியவை இணைந்து தயாரித்த இரண்டு பருவங்களைக் கொண்ட அனிமேஷன் தொடரான கே.டி.பி- பாரத் ஹே ஹம் தொடரின் முன்னோட்டக் காட்சியை  மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் இன்று வெளியிட்டார்.  

1500 முதல் 1947 வரையிலான இந்திய சுதந்திரப் போராட்டக் கதைகளைக் கொண்ட இந்தத் தொடர் 52 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு தொடரும் 11 நிமிட கதைகளைக் கொண்டது. இந்தத் தொடரில் புகழ்பெற்ற அனிமேஷன் கதாபாத்திரங்களான க்ரிஷ், திரிஷ் மற்றும் பால்டி பாய் தொகுத்து வழங்குகின்றனர். இந்த தொடரை கிராஃபிட்டி ஸ்டுடியோவைச் சேர்ந்த முஞ்சல் ஷெராஃப் மற்றும் திலக்ராஜ் ஷெட்டி ஆகியோர் உருவாக்கியுள்ளனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அனுராக் தாக்கூர், சுதந்திரப் போராட்டத்தில் அதிகம் அறியப்படாத ஆனால் குறிப்பிடத்தக்க பங்களிப்பாளர்கள், கடந்த கால கல்வி முறையால் மறக்கப்பட்ட பங்களிப்பாளர்கள் மற்றும் போதுமான அளவு புகழ் வெளிச்சம் படாத பங்களிப்பாளர்கள் குறித்து இளைஞர்களுக்கு கற்பிக்கும் ஒரு முயற்சியாகும் என்று கூறினார்.

“அதே நேரத்தில் நவீன இந்தியாவை வடிவமைத்தவர்களின் கதையைக் கொண்டு வந்து இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் முயற்சியை இந்தத் தொடர் மேற்கொண்டு வருகிறது. வெளிநாட்டு மொழிகள் உட்பட பல மொழிகளில் வெளியாகும் இந்தத் தொடர், மொழித் தடைகளைத் தாண்டி அவர்களின் கதைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்லும்”, என்று கூறினார்.

தூர்தர்ஷன், நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் ஆகியவை இந்த அனிமேஷன் தொடரை ஒரே நேரத்தில் ஒளிபரப்பும் என்று குறிப்பிட்டார். இது இதற்கு முன்பு மேற்கொள்ளப்படாத முயற்சியாகும். வெளிநாட்டு காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் பெண்கள் மற்றும் பழங்குடி சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பு இந்த தொடரின் முக்கிய மையப்புள்ளியாகும்.

இந்தத் தொடர் அடுத்த அமர்வின் போது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் காண்பிக்கப்படும் என்று அறிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் ஐந்து உறுதிமொழிகளை மீண்டும் வலியுறுத்திய அவர், சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்களைத் தியாகம் செய்த அதே வேளையில், இன்றைய இளைஞர்கள் இந்த நாட்டை அமிர்த காலத்தில் இருந்து ஸ்வர்ணகாலம் வரை கொண்டு செல்ல தங்கள் முயற்சியில் பங்களிக்க வேண்டும் என்று கூறினார்.

தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை செயலாளர்  அபூர்வா சந்திரா, இது அமைச்சகத்திற்கு ஒரு முக்கியமான சந்தர்ப்பமாகும் என்றார். பொதுவாக இந்திய மக்களையும் குறிப்பாக நாட்டின் குழந்தைகளையும் இலக்காகக் கொண்ட ஒரு அனிமேஷன் தொடரை தொடங்குவது இதுவே முதல் முறையாகும். செலவின அமைப்பான மத்திய மக்கள் தொடர்பகம் வருவாய் ஈட்டும் துறையில் நுழைவது இதுவே முதல் முறை என்று தெரிவித்தார்.

Tags: Anurag Thakur Press Meetcentral government minister
ShareTweetSendShare
Previous Post

அரிய புவி தனிமங்கள் தோண்டி எடுப்பதற்கான உரிமைத்தொகை விகிதங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

Next Post

நாட்டின் நலனுக்காக சாத்தியமற்ற பணிகளைப் பிரதமர் மோடியால் மட்டுமே செய்ய முடியும் என்று மஹந்த் சந்த்நாத் யோகி நம்பினார்!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies