இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு உதவும் வகையில் 24 மணி நேர ஹெல்ப்லைன் எண்ணை இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே கடந்த 5 நாட்களாக கடும் போர் நடைபெற்று வருகிறது. இதனால், போர் பதற்றம் நிலவி வருகிறது. இஸ்ரேலில் இந்தியாவைச் சேர்ந்த சிலர் சிக்கிக் கொண்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்களுக்குப் போர்க்கால அடிப்படையில் உதவி செய்ய வேண்டும் என அங்குள்ள இந்திய தூதரகத்திற்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மத்திய அரசும் நேரடியாக பல்வேறு வகையில் நேரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களைப் பாதுகாக்கும் வகையில், 24 மணி நேர ஹெல்ப்லைன் எண்ணை அறிவித்துள்ளது.
அதன்படி, +972-35226748 மற்றும் +972-543278392 ஆகிய 2 தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், cons1.telaviv@mea.gov.in என்ற மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தயவுசெய்து அமைதியாகவும் விழிப்புடனும் இருங்கள் மற்றும் பாதுகாப்பு ஆலோசனைகளைப் பின்பற்றவும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.