இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை லீக் போட்டி டெல்லி அருண்ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். உலகக் கோப்பையில் அதிக சதங்களை அடித்த இந்தியராக 6 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் திகழ்ந்தார் அந்த சாதனையை முறியடித்து 7 சதங்களுடன் ரோஹித் சர்மா முன்னிலை வகிக்கிறார்.
உலகக் கோப்பையில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை கடந்த வீரராகவும், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்தவராகவும் திகழ்கிறார் இந்திய வீரர் ரோஹித் சர்மா.
மேலும், உலகக் கோப்பையில் அதிவேகமாக சதம் அடித்தவராகவும் திகழ்கிறார். இதற்கு முன்பு கபில்தேவ் இந்த சாதனையை 72 பந்துகளில் படைத்திருந்த நிலையில் தற்போது ரோகித் சர்மா முறியடித்திருக்கிறார்.
இதேப் போன்று சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 31வது சதத்தை பூர்த்திச் செய்த ரோகித் சர்மா ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறிடியத்து இருக்கிறார்.