இந்தியா சுயசார்பு மிக்க நாடாக வலிமையோடு திகழ்கிறது - எல் முருகன்!
Sep 12, 2026, 10:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா சுயசார்பு மிக்க நாடாக வலிமையோடு திகழ்கிறது – எல் முருகன்!

Murugesan M by Murugesan M
Oct 12, 2023, 10:38 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலக நாடுகளை மிஞ்சும் வகையில் இந்தியா சுயசார்பு மிக்க நாடாக வலிமையோடு திகழ்கிறது என மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில்  புரோவிடென்ஸ் மகளிர் கல்லூரியில் இன்று தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தொடங்கிவைத்தார்.

கூட்டதில் பேசிய எல் முருகன், சிறுதானிய உணவுகளின் பயன்கள் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் இந்தாண்டு சிறுதானிய உணவு ஆண்டாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

அங்கு அமைக்கப்பட்டிருக்கும் அரங்கில் பல்வேறு மத்திய அரசு நலத்திட்டங்கள், சிறுதானியங்களின் நன்மைகள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும்  அதனை மாணவர்கள் பின்பற்றி பயன் பெறவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  பிரதமரின் செயல்பாடுகள் காரணமாக உலக நாடுகளை மிஞ்சும் அளவிற்கு நமது நாடு வலிமை மிக்க  நாடாகவும் சுயசார்பு கொண்ட நாடாகவும்  உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மகளிருக்கு நாடாளுமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீட்டை பிரதமர் அறிவித்துள்ளதாகக் கூறிய அவர், இது நாட்டில் உள்ள பெண்களுக்கு அதிகாரம்  அளிப்பதாக அமையும் என்று தெரிவித்தார். புத்தொழில் நிறுவனங்கள் ஒரு லட்சத்திற்கும் மேலாக உருவாகியுள்ளது என்றும் இவை அனைத்தும், 30 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்களால்  நடத்தப்படுவது என்று கூறினார்.

வேலைக்காக காத்திருந்த காலம் மறைந்து இப்போது பிறருக்கு வேலை அளிப்பவர்களாக நமது நாட்டு இளைஞர்கள் மாறியிருக்கிறார்கள் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

பாதுகாப்புத் துறையில் கூட நமது நாட்டில் தயாரிக்கும் பொருள்களை நாம்  பயன்படுத்துவதோடு  வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனைகள் குறித்த புத்தகத்தை அமைச்சர் திரு எல் முருகன் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், பதக்கங்களை அவர் வழங்கினார். இந்நிகழ்வின் போது, பழங்குடியின மக்கள் அமைச்சரை கௌரவித்தனர்.

Tags: L Murugan
Share
Tweet
SendShare
Previous Post

நாட்டின் நலனுக்காக சாத்தியமற்ற பணிகளைப் பிரதமர் மோடியால் மட்டுமே செய்ய முடியும் என்று மஹந்த் சந்த்நாத் யோகி நம்பினார்!

Next Post

சரித்திரச் சாதனை படைத்த சரித்திர நாயகன் !

Related News

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies