வரும் விஜயதசமி அன்று 14 மாவட்டங்களில் 20 இடங்களில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் கடந்த 1925 செப்டம்பர் 27 -ம் தேதி விஜயதசமி அன்று நிறுவப்பட்டது. இதனையடுத்து, வரும் விஜயதசமி அன்று தமிழகத்தில், 14 மாவட்டங்களில் 20 இடங்களில் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடத்த ஆர்.எஸ்.எஸ். சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, திருச்சி, தஞ்சை புதுக்கோட்டை, கரூர், மதுரை, திண்டுக்கல் , தேனி, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 14 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடத்த நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த மனுவில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள், காக்கி பேண்ட், வெள்ளை சர்ட், தொப்பி ஆகியவை அணிந்து வரவும் அனுமதியளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.