இஸ்ரேலில் இருந்து தாயகம் திரும்பும் இந்தியர்களுக்கான சிறப்பு விமானம் இன்று இரவு 9 மணிக்கு புறப்பட உள்ளது. இதில், 230 இந்தியர்கள் பயணம் செய்ய உள்ளனர்.
இஸ்ரேல் – ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே கடந்த 5 நாட்களுக்கு மேலாக கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இது தரப்பும் ராக்கெட் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கி வருகின்றனர். இதில், இரு நாட்டைச் சேர்ந்த பொது மக்கள் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை உடனடியாக மீட்க வேண்டும் எனப் பாரத பிரதமர் மோடி உத்தரவிட்டார். அதன் பேரில், இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்கும் வகையில், ஆப்ரேஷன் அஜய் என்ற பெயரில் இந்தியா அதிரடி நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இதற்காக, இஸ்ரேல் மற்றும் இந்தியாவில் 24 மணி நேரமும் செயல்படும் ஹெல்ப்லைன் துவங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேலில் இருந்து தாயகம் திரும்பும் இந்தியர்களுக்கான சிறப்பு விமானம் இன்று இரவு 9 மணிக்கு புறப்பட உள்ளது. இதில், 230 இந்தியர்கள் பயணம் செய்கின்றனர். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், இந்தியா வருபவர்களைத் தேர்வு செய்து அழைத்து வரப்படுகிறது. அவர்கள் அனைவரும் திரும்பும் பயணச் செலவை, பாரத அரசே ஏற்றுக் கொள்கிறது.
இஸ்ரேல் – ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே போர் தொடங்கிய நிலையில், கடந்த 7-ம் தேதி முதல் ஏர் இந்தியா தனது விமானச் சேவையை நிறுத்திக் கொண்டது. இந்த நிலையில்தான், இஸ்ரேலில் உள்ள இந்தியர்களைக் காப்பாற்ற, சிறப்பு விமானம் இயக்கப்படுகிறது.
விமானத்திற்காகக் காத்துள்ள அனைவரும், பாரத பிரதமர் மோடியின் கருணையை நினைத்து மிகவும் பெருமைப்படுவதோடு, மனதார பாராட்டி வருகின்றனர். பிரதமரின் உடனடி நடவடிக்கைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.