ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ராமேஸ்வர முருகன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ராமேஸ்வர முருகன் வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
ராமேஸ்வர முருகன் பள்ளி கல்வித்துறையில் 2012-16 காலகட்டத்தில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது.
இந்நிலையில், வருமானத்துக்கு அதிகமாக 354 சதவீதம் சொத்து சேர்த்துள்ளதாக கூறி, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ராமேஸ்வர முருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.