சென்னிமலையை கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம் - திமிர் பேச்சைக் கண்டித்து பாஜக, இந்து முன்னணி போராட்டம்!
Sep 13, 2026, 01:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னிமலையை கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம் – திமிர் பேச்சைக் கண்டித்து பாஜக, இந்து முன்னணி போராட்டம்!

Murugesan M by Murugesan M
Oct 13, 2023, 04:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னிமலையில் மலை மீதுள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை, கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம் என்று கூறிய கிறிஸ்தவ முன்னணி அமைப்பினரைக் கைது செய்யக் கோரி, சென்னிமலையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக, இந்து முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை முருகன் திருக்கோவில் பிரசித்தி பெற்ற ஸ்தலம். இங்குதான் கந்த சஷ்டி கவசம் முதல் முறையாக அரங்கேற்றப்பட்டது. அவ்வளவு பெருமை வாய்ந்த ஸ்தலம்.

சென்னிமலையில் இருந்து அரச்சலூர் செல்லும் சாலையில் கத்தக்கொடி காடு என்ற பகுதியில், ஜான் பீட்டர் என்பவர் வீடு வாங்கி மத போதகராகக் கிறிஸ்துவ மதப் பிரச்சாரம் செய்து வந்துள்ளார்.

கடந்த 2 வருடங்களுக்கு மேலாக ஜெபக் கூட்டங்கள் நடத்துவதும், ஒலிபெருக்கி மூலம் இந்து தெய்வங்களைச் சாத்தான் என அவமதித்து பேசுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். இதனைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் சென்னிமலை காவல் நிலையத்தில் பல முறை புகார் செய்துள்ளனர். ஆனால், நடவடிக்கை இல்லை.

இந்த நிலையில், மாதம் செப்டம்பர் 17 -ம் தேதி அன்று, வெளியூரிலிருந்து மக்களைத் திரட்டி வந்து ஜெபக்கூடம் நடத்தியுள்ளார். அப்போது, ஒலிபெருக்கி மூலம் ஹிந்து தெய்வங்களைச் சாத்தான் எனக்கூறி இழிவுபடுத்தியுள்ளார். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கூட்டம் நடந்த பகுதிக்குச் சென்ற பாஜகவினர் மற்றும் ஹிந்து முன்னணி அமைப்பினர் இது குறித்து கேள்வி எழுப்பினர். சென்னிமலையில் மலை மீதுள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை, கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம் என்று கூறிய கிறிஸ்தவ முன்னணி அமைப்பினர் கூறியதால் இரு தரப்புக்கும் இடையே வாக்கு வாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இந்த நிலையில், கிறிஸ்துவ அமைப்பினர் வலியுறுத்தல் காரணமாகக் கொடுக்கப்பட்ட புகாரின் மீது மட்டும் கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்துக்கள் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனிடையே, சென்னிமலையில் மலை மீதுள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை, கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம் என்று கூறிய கிறிஸ்தவ முன்னணி அமைப்பினரைக் கைது செய்ய வேண்டும் என சென்னிமலையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags: hindu munnaniMurugan Temple
Share
Tweet
SendShare
Previous Post

வருமானத்துக்கு அதிகமாக 354 சதவீதம் சொத்து சேர்ப்பு!- ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் மீது வழக்குப் பதிவு!

Next Post

ஐ.ஐ.டி. மாணவர்கள் இஸ்ரோவில் பணிபுரிய விரும்பவில்லை !- இஸ்ரோ தலைவர்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies