இரயில் தண்டவாள பராமரிப்பு பணிக்காக, சென்னை – குருவாயூர் விரைவு இரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எழும்பூர் – குருவாயூர் விரைவு இரயில் வருகிற 15-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை மற்றும் 22-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை இரயில் சேவை பகுதி இரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னை-குருவாயூர் விரைவு இரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. சென்னை எழும்பூர் – குருவாயூருக்கு வருகிற 15-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை மற்றும் 22-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை இரயில் சேவை பகுதி இரத்து செய்யப்பட உள்ளது.
சென்னை சென்ட்ரல் – பாலக்காடுக்கு இன்று முதல் 29-ஆம் தேதி வரை இயக்கப்படும் பாலக்காடு விரைவு இரயில் (இரயில் எண் – 22651), பாலக்காடு டவுன்-பாலக்காடு சந்திப்பு இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.
பாலக்காடு – சென்னை சென்ட்ரலுக்கு இன்று முதல் 30-ஆம் தேதி வரை புறப்பட வேண்டிய விரைவு இரயில் (இரயில் எண் – 22652), பாலக்காடு சந்திப்பு – பாலக்காடு டவுன் இடையே பகுதி இரத்து செய்யப்பட உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.