2028ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் உடன் சேர்த்து புதியதாக ஐந்து விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளது.
2028ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் புதிதாக 5 விளையாட்டுகளைச் சேர்க்க, ஒலிம்பிக் ஏற்பாட்டுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. 2028ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் புதிதாக 5 விளையாட்டுகளைச் சேர்க்க, ஒலிம்பிக் ஏற்பாட்டுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
அதில் கிரிக்கெட் போட்டிக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாக், மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், ” 2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டினைப் பொறுத்தவரையில், ஐஓசி மூன்று முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. முதலில், லாஸ் ஏஞ்சல்ஸ் ஏற்பாட்டுக் குழு ஐந்து புதிய விளையாட்டுகளை அறிமுகப்படுத்துகிறது. அவை கிரிக்கெட், பேஸ்பால், சாப்ட்பால், கொடி கால்பந்து மற்றும் ஸ்குவாஷ்” என கூறினார்.
1900ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டானது இடம்பிடித்திருந்தது. மொத்தம் அப்போது விளையாடப்பட்ட 18 விளையாட்டுகளில், கிரிக்கெட்டும் ஒன்றாக இருந்தது. அந்த ஒலிம்பிக் போட்டியில் ஒவ்வொரு அணிகளிலும் 11 வீரர்களுக்கு பதிலாக 12 வீரர்கள் இடம்பிடித்திருந்ததோடு, போட்டிகள் இரண்டு நாள்களுக்கு மேலாக விளையாடப்பட்டது.
இதையடுத்து இரண்டு வாரங்கள் வரை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள், ஒரு போட்டி ஐந்து நாள்கள் என நடைபெறும் கிரிக்கெட் போட்டியை நடத்துவதில் சிக்கல் எழுந்தது. இதன் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் நீக்கப்பட்டன. தற்போது அந்த சிக்கல்கள் நீங்கியுள்ளதால் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெற்றுள்ளது.