பின்தங்கிய இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு சான்றிதழ்  படிப்புக்கான ஒப்பந்தம்!
Oct 28, 2026, 04:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பின்தங்கிய இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு சான்றிதழ்  படிப்புக்கான ஒப்பந்தம்!

Murugesan M by Murugesan M
Oct 13, 2023, 06:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பின்தங்கியிருக்கும் இளைஞர்களுக்கு அதிகாரமளிக்க தனியார், தொழில்துறை மற்றும் கார்ப்பரேட் பாதுகாப்பு மேலாண்மை பள்ளி மற்றும் ராஞ்சி செக்யூரிட்டி நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

விரிவான பாதுகாப்புக் கல்வியை வழங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட, புகழ்பெற்ற நிறுவனமான தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள தனியார், தொழில்துறை மற்றும் கார்ப்பரேட் பாதுகாப்பு மேலாண்மைப் பள்ளி ராஞ்சி செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வு இன்று தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் (டாக்டர்) கல்பேஷ் எச்.வாந்த்ரா மற்றும் ராஞ்சி செக்யூரிட்டி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் அனிருதா சிங் முன்னிலையில் நடைபெற்றது.

பாதுகாப்புத் துறையில் உள்ள திறன் இடைவெளியைக் குறைப்பதற்கும், சமூகத்தின் விளிம்புநிலை பிரிவினருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இந்த  ஒப்பந்தம் வழிவகுக்கும்.

பெரு நிறுவனங்கள் மற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் பணிபுரிய விரும்பும் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பின்தங்கிய இளைஞர்கள் மற்றும் பெண்கள் இந்த சான்றிதழ் படிப்புகளால் பெரிதும் பயனடைவார்கள்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரு நிறுவனங்கள் மற்றும் தனியார்  பாதுகாப்பு நிறுவனங்களில் வேலைக்கு சேர விரும்பும் பின்தங்கிய இளைஞர்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் திறன் மேம்பாட்டு சான்றிதழ்  படிப்பை  இணைய வழியிலும் வகுப்பறை வாயிலாகவும் கூட்டாக நடத்துவதை இந்த  ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

திறன் மேம்பாடு மற்றும் மறுதிறன் பெறுவதற்கான வாய்ப்புகளைத் தேடும் பணியாளர்களுக்கு, குறிப்பாக பாதுகாப்புத் துறையில் உள்ள பெண்களுக்கு இந்தப் படிப்பு உதவியாக இருக்கும்.

Tags: certificate course for underprivileged youth!Agreement for skill development certificate course
Share
Tweet
SendShare
Previous Post

சாதிய ஒடுக்கு முறைகளை ஒழிக்க வேண்டும் !- தத்தாத்ரேயா ஹொசபலே.

Next Post

ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்!

Related News

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

சென்னை எண்ணூரில் கடல் சீற்றம் – சாலையில் சீறிப் பாய்ந்த நீர்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies