2023-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் சனிக்கிழமை அதாவது 14-ம் தேதி, பாரதம் – பாகிஸ்தான் இடையே நடைபெற உள்ளது.
அதுவும், குஜராத் மாநிலத்தில், ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், இந்த வருடம் பாரதமும், பாகிஸ்தானும் மோதும் முதல் போட்டி என்பதால், இருநாடுகளிலும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
பாரத நாட்டை பரம எதிரியாகக் கருதும் பாகிஸ்தான் நாட்டோடு விளையாட்டு தேவையா? எனக் கொதிக்க ஆரம்பித்துவிட்டனர் தேச பக்தர்களும், கிரிக்கெட் ஆர்வலர்களும்,
இந்த நிலையில்தான், பாரதத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் காலை வைத்தபோது, அவர்களை உற்சாகப்படுத்த நடன மங்கைகள் மலர்கள் தூவி ஆடிப்பாடி வரவேற்றனர். மேலும், பொன்னாடை அணிவித்தும் வரவேற்றனர்.
இதைப் பார்த்த தேச பக்தர்கள் இரத்தம் கொதித்துப்போனார்கள். பாரத்தைத் துண்டாட வேண்டும் என ஜம்மு – காஷ்மீரில் நித்தமும் கலவரத்தையும், வெடி குண்டுகளையும் வெடிக்க வைத்துக் கொண்டிருக்கும் பாகிஸ்தானுடன் விளையாட்டு ஒரு கேடா? என வெளிப்படையாகவே கொதித்துவிட்டனர்.
இந்த நாட்டிற்காக இரத்தம் சிந்திய ராணுவ வீரர்கள் முன்பு, கிரிக்கெட் போட்டி ஒன்றுமே இல்லை என வெடித்துக் கிளம்பினர். தயவு செய்து, பாரதம் – பாகிஸ்தான் போட்டியைப் புறக்கணிக்க வேண்டும் என இணையதளங்களில் விண்ணை முட்டும் அளவு கருத்துப் பதிவுகள் மின்னல் வேகத்தில் வந்து கொண்டே இருக்கின்றன.
மேலும், பாலிட் பாடகர்கள் அரிஜித் சிங் மற்றும் சங்கர் மகாதேவன் மற்றும் சுக்விந்தர் சிங் ஆகியோர் பங்கேற்கும் நிகழ்ச்சி பார்வையாளர்களை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.
பாரதமும், பாகிஸ்தானும் கடந்த 2013 -ம் ஆண்டு முதல் இருதரப்பு தொடரில் விளையாடவில்லை, கடைசியாக 2008 -ம் ஆண்டு ஆசியக் கோப்பைக்காக பாகிஸ்தானுக்குச் சென்றது. 2013 முதல், டி20 உலகக் கோப்பை, ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) போட்டி, ஆசியக் கோப்பை போன்ற ஐசிசி போட்டிகளில் மட்டுமே பாரதம் பாகிஸ்தானுடன் விளையாடி வருகிறது என்றும் நெட்டிசன்கள் விளக்கம் கொடுக்கின்றனர்.
விளக்கத்திலும், கோபத்திலும் நியாயம் உள்ளது என்பதே நிதர்சனமான நிஜம்.