நாமக்கல் மாவட்டம் தும்மங்குறிச்சியில் மூன்று சமூகத்தாருக்கு சொந்தமான கூத்தாண்டம்மன் மற்றும் கொங்களாயி அம்மன் திருக்கோவில் கடந்த 7 வருடங்களுக்குப் பிறகு தற்போது திறக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் தும்மங்குறிச்சியில் மூன்று சமூகத்தாருக்குச் சொந்தமான கூத்தாண்டம்மன் மற்றும் கொங்களாயி அம்மன் திருக்கோவில் உள்ளது. இதேபோல, பத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.
இந்த கோவிலில் வழிபாடு நடத்தும் மூன்று சமூகத்தினர் இடையே கடந்த 2016-ம் ஆண்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், அந்த கோவில் சீல் வைக்கப்பட்டது. பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் கோவிலை திறக்க சம்பந்தப்பட்டவர்கள் முன்வரவில்லை. இதனால், கடந்த 7 வருடமாக கோவில் பூட்டியே இருந்தது.
இந்த நிலையில், கோவிலை திருக்க வேண்டி மூன்று சமூக மக்களும் ஒன்று திரண்டு வந்தனர். அவர்களிடம் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், கோவிலை திறக்க முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொர்டந்து, தாசில்தார் சக்திவேல் முன்னிலையில் கோவில் திறக்கப்பட்டது. இதனையடுத்து, மூன்று சமூக மக்களும் ஒன்றாகச் சென்று சிறப்பு பூஜை செய்து சுவாமி வழிபாடு நடத்தினர்.