மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தும் ஹமாஸ் தீவிரவாதிகள்!
Nov 13, 2026, 11:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தும் ஹமாஸ் தீவிரவாதிகள்!

மனிதாபிமான உதவிகளை செய்ய முடியவில்லை: அமெரிக்கா குற்றச்சாட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 14, 2023, 01:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகள் அப்பாவி பொதுமக்களை மனிதக் கேடங்களாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், காஸா நகர மக்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்வதில் சிக்கல் நிலவுகிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறியிருக்கிறார்.

பாலஸ்தீனத்தின் காஸா தன்னாட்சி நகரை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி காலை இஸ்ரேல் நாட்டின் மீது 7,000 ஏவுகணை வீசி கொடூரத் தாக்குதலை நடத்தினர். இதற்கு இஸ்ரேல் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. ஹமாஸ் தீவிரவாதிகளை வேரோடு அழிக்காமல் விடமாட்டோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்திருக்கிறார்.

இஸ்ரேலுக்கு தங்களது பகிரங்க ஆதரவை அளித்திருக்கும் அமெரிக்கா, தனது நாசக்காரக் கப்பலையும் அந்நாட்டுக்கு உதவியாக அனுப்பி இருக்கிறது. மேலும், அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், பாதுகாப்புச் செயலாளர் லாயிட் ஆஸ்டின் ஆகியோரும் இஸ்ரேலுக்கு நேரடி பயணம் செய்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். மேலும், இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியிலும் அமெரிக்கா ஈடுபட்டிருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் சென்ற அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், ஜோர்டான் சென்று அந்நாட்டு மன்னர் அப்துல்லாவையும், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸையும் சந்தித்தார். தொடர்ந்து, கத்தார் சென்ற பிளிங்கன், அந்நாட்டின் பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான முகமது பின் அப்துல் ரஹ்மான அல் தானியை சந்தித்தார். அப்போது, இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து இருவரும் விவாதித்தனர்.

இதன் பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமெரிக்க வெளியுறவுத்துறை பிளிங்கன் கூறுகையில், “ஹமாஸ் அமைப்பினர் நடத்திய கொடூரமான தீவிரவாதத் தாக்குதல்களில் 1,300 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மேலும், அந்நாட்டுப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தியதோடு, குழந்தைகள், முதியவர்களை சித்ரவதை செய்து எரித்திருக்கிறார்கள்.

அதேபோல, காஸாவில் வசிக்கும் பாலஸ்தீன ஆண்கள், பெண்கள், முதியோர், சிறுவர்கள், சிறுமிகள் என பாரபட்சமின்றி மனிதக் கேடயங்களாக பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக, காஸா நகர மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளைக்கூட செய்ய முடியவில்லை. கடுமையான சிக்கல் நிலவுகிறது. மேலும், இஸ்ரேல் நாட்டு இராணுவத்தின் எச்சரிக்கைப்படி பாலஸ்தீனியர்களை தெற்கு காஸாவுக்கு செல்லவிடாமல் சாலைகளில் தடுப்பை ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர்.

எனினும், கத்தார் உள்ளிட்ட கூட்டாளி நாடுகளுடன் சேர்ந்து உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி வழங்குவதில் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். அதேசமயம், இஸ்ரேலுக்கு தனது மக்களைப் பாதுகாப்பதற்கும், கடந்த 7-ம் தேதி நடந்தது மீண்டும் நடக்காமல் இருக்கவும் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வதற்கு உரிமையும், கடமையும் உள்ளது. இனி ஹமாஸுடன் வழக்கமான எவ்வித வணிகமும் கிடையாது என்பதை இப்பயணம் முழுவதும் எனது எல்லா உரையாடல்களிலும் நான் தெளிவாகக் கூறி வருகிறேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய கத்தார் பிரதமர் ஷேக் முகமது, “கத்தாரைப் பொறுத்தவரை, இராஜதந்திர அணுகுமுறையில் போர் நிறுத்தம் கோருவது, பொதுமக்களைப் பாதுகாப்பது, சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பது மற்றும் வன்முறையை இப்பிராந்தியத்தில் பரப்பாமல் தடுப்பது ஆகியவைதான். இதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். ஏனெனில், இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். காஸா பகுதியில் நிலைமை மோசமடைந்திருக்கும் நிலையில், பாலஸ்தீனியர்களுக்குத் தேவையான உதவிகள் சென்று கொண்டிருக்கின்றன” என்றார்.

Tags: americaMEA Antony BlingenQuatar PM
Share
Tweet
SendShare
Previous Post

7 ஆண்டுகளாக பூட்டப்பட்ட கோவில் மீண்டும் திறப்பு – மகிழ்ச்சியில் பக்தர்கள்

Next Post

மேட்டூர் அணை நீர்மட்டம் 38.60 அடியாக உயர்வு

Related News

இந்தியாவின் முதல் 8K LED கோளரங்கம்; பிரதமர் மோடி திறந்து வைத்தார்

இஸ்ரேல் பிரதமராகும் முன்னாள் ராணுவ தளபதி : காத்திருக்கும் சவால்கள் – சிறப்பு தொகுப்பு!

சோனியா காந்தியின் சுயசரிதை நூலில் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள் : தொடரும் சர்ச்சை – சிறப்பு தொகுப்பு!

செங்கல்பட்டு அருகே வேல் யாத்திரை தடுத்து நிறுத்தம் – விஸ்வ ஹிந்து பரிஷத் குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கோலாகலம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

சர்வரில் கோளாறு – உலகின் பல்வேறு பகுதிகளில் மைக்ரோசாப்ட் சேவை முடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி தாக்கல் செய்த உதயநிதி மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

குழந்தைகள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டம் – சென்னையில் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!

இன்றைய தங்கம் விலை!

முல்லைப்பெரியாறு அணையில் நீர்க்கசிவு, மதகுகளின் இயக்கம் சீராக உள்ளது – கண்காணிப்பு குழு தகவல்!

அரசியலமைப்பும் ஜனநாயகமும் பாக்கெட்டில் உள்ளதாக நினைக்கும் தலைவர் – ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்த பிரதமர் மோடி!

ஜெம் வீரமணி தொடர்பான பாலியல் வழக்கு – குற்றப்பத்திரிகையில் அருண் ஐபிஎஸ் உள்ளிட்ட காவல் உயரதிகாரிகளின் பெயர் சேர்ப்பு!

தென்கிழக்கு வங்கக்கடலில்  இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

செய்தியாளர்களை தவிர்த்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்; முன்கூட்டியே வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழக அரசின் வங்கிக் கணக்கில் ரூ.22 கோடி மாயம் : டிஜிட்டல் கொள்ளையின் பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies