மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தலில், வெற்றிக்கான வியூகத்தை பாஜக வகுத்துள்ளது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால், வெற்றிக்கான வியூகத்தை பாஜக வகுத்து வருகிறது.
அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் 39 பேர் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியலைக் கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதியும், செப்டம்பர் 25-ம் தேதி 40 வேட்பாளர்கள் அடங்கிய 2-வது பட்டியலை வெளியிட்டது. அதேபோல, சத்தீஸ்கர் மாநிலத்தில் 21 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை வெளியிட்டது. மற்ற மாநிலங்களிலும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.
இதனிடையே, தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் உள்ள ஏ, பி, சி, டி என 4 வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஏ என்பது கட்சி தொடர்ந்து வெற்றி பெறும் இடமாகும், பி என்பது வெற்றி – தோல்வி எனக் கலவையான இடங்கள் ஆகும். சி என்பது பலவீனமான இடமாகும். டி என்பது கடந்த 3 தேர்தல்களில் பா.ஜ.க. தொடர் தோல்விகளைச் சந்திக்கும் இடமாகும்.
இப்படி, தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பகுதிகளை ஏ, பி, சி, டி என 4 வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில், பிரதமர் மோடியின் கடந்த 9 ஆண்டுக் கால சாதனைகளை முன்னிலைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒவ்வொரு தொகுதியிலும் செயல்பட்டுத்தப்பட்ட திட்டங்கள் , பயளானிகள் விவரங்கள் மற்றும் டி பகுதிகளில் பாஜக சாதனைகளை வகைப்படுத்தி, பட்டியல் வெளியிட முடிவு செய்யப்பட்டது. பொதுமக்களை நேரடியாக சந்தித்தும் விளக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பிரதமர் மோடியின் சாதனைகளைத் துண்டுப் பிரசுரம், பேஸ்புக், எக்ஸ் பதிவு, வாட்ஸ் அப் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், வெற்றி எளிது என்பதால், பாஜகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.