உலகக்கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அதிரடி வெற்றி !
Sep 13, 2026, 06:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகக்கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அதிரடி வெற்றி !

Murugesan M by Murugesan M
Oct 15, 2023, 10:56 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் 12 வது போட்டியில் இந்தியா 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேற்று விளையாடியது.

கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபீக் மற்றும் இமாம்-உல்-ஹக் ஆகியோர் களமிறங்கினர். இதில் 8 வது ஓவரில் அப்துல்லா ஷபீக் 24 பந்துகளில் 20 ரன்களை எடுத்து சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக இமாம்-உல்-ஹக் 38 பந்துகளில் 36 ரன்களை எடுத்து ஹர்திக் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் கூட்டணி சிறப்பாக விளையாடி வந்த நிலையில் பாபர் ஆசாம் 58 பந்துகளில் அரைசதம் அடித்து சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். ரிஸ்வான் 69 பந்துகளில் 49 ரன்களை எடுத்து பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் 2, 4, 6 என ஒரு இலக்கு ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 23 வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 191 ரன்களை மட்டுமே எடுத்தது.

இந்தியா அணியில் பும்ரா, ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, சிராஜ், குலதீப் யாதவ் என அனைவரும் தலா 2 விக்கெட்களை வீழ்த்தனர்.

192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் கில் களமிறங்கினர்.

சுப்மன் கில் 4 பௌண்டரீஸ் அடித்து 11 பந்துகளில் 16 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய விராட் கோலி 3 பௌண்டரீஸ் அடித்து 18 பந்துகளில் 16 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.

பேட்டிங்கில் அதிரடியை காண்பித்த ரோஹித் சர்மா 6 பௌண்டரீஸ் 6 சிக்சர்கள் அடித்து 63 பந்துகளில் 86 ரன்களோடு ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் நிதானமாக விளையாடி 62 பந்துகளில் 52 ரன்களையும் கே.எல்.ராகுல் 19 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தியா 30 வது ஓவரில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 192 ரன்களை எடுத்து வெற்றி வாகை சூடியது.

இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது 7 ஓவர்களில் 19 ரன்களை கொடுத்து 2 விக்கெட்களை எடுத்த பும்ராவுக்கு வழங்கப்பட்டது.

Tags: ICC World Cupindia vs pakistan
Share
Tweet
SendShare
Previous Post

இஸ்ரேல்-காசா போர் ! என்னதான் நடக்குது அங்கே ?

Next Post

5 மாநிலங்களுக்கான தேர்தல்: பாஜக புதிய வியூகம்!

Related News

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies