குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாகத் தமிழகம் வருகை தர உள்ளார்.
ஜனாதிபதி திரௌபதி முர்மு, இரண்டு நாள் பயணமாக வரும் 26-ம் தேதி தமிழகம் வருகிறார். சென்னையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். மேலும், 27-ம் தேதியும் சென்னையில் தங்குகிறார்.
தமிழகம் வரும் குடியரசுத் தலைவருக்குத் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் மாநில அமைச்சர்கள் சென்னை விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்க உள்ளனர்.
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வரும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, விழா முடிந்ததும் தனி விமானத்தில் டெல்லி திரும்பிச் செல்கிறார்.
ஜனாதிபதி திரௌபதி முர்மு தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணமாக வருகையையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.