இந்தியா முழுவதும் ஏராளமான மலைப் பிரதேசங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான மலைப் பகுதிகள் சுற்றுலாவாசிகளின் விரும்பத்தக்கப் பகுதிகளாக அமைந்துள்ளது.
குறிப்பாக, தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி போன்றவை பசுமை நிறைந்த மலைப் பகுதிகளாகும். அது மட்டுமல்ல, ஏற்காடு ஏரி, கிள்ளியூர் நீர்வீழ்ச்சி, சேர்வராயன் மலைக்கோவில், கரடி குகை, கிரேஞ்ச், தொங்கு பாறை, பகோடா பாயிண்ட், ரோஜாத் தோட்டம் மற்றும் சில்க் பண்ணை ஆகிய இடங்கள் சுற்றுலா பயணிகளைச் சுண்டி இழுக்கும் இடங்களாகும்.
இந்நிலையில், விடுமுறை நாட்களில் மலைப் பிரதேசங்களில் சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாதாரண நாட்களில் 100 -க்கும் மேற்பட்ட வாகனங்களிலும், விடுமுறை தினங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களிலும் செல்கின்றனர். மலைபகுதிகளில் அதிக வாகனங்கள் செல்வதால், சாலைகள் அதன் போக்கு மாறி, விபத்து ஏற்படுத்தும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. மேலும், வாகனப் புகை காரணமாக, சுற்றுச்சூழலும் பாதிப்படுகிறது.
மேலும், சுற்றுலா செல்வர்கள் தாங்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகளை போடுவதால், அழகிய மலைப் பிரதேசங்கள் ஆங்காங்கே குப்பைத் தொட்டி போலக் காட்சி தருகின்றன. போதை குறைக்குக் குடிமகன் தாங்கள் குடித்துவிட்டு வீசும் மது பாட்டில்கள் சிதறிக்கிடக்கிறது.
எனவே, அழகிய மலைப் பிரதேசங்களை உடனே காப்பாற்றத் தமிழக புதிய திட்டங்களைத் தீட்டி, அதனைச் செயல்படுத்த முன்வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.