வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளுக்கு குறையாமல் போட்டியிட வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என காங்கிரஸ் கட்சியின் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, தேசிய கட்சிகள் முதல் மாநிலக் கட்சிகள் வரை அனைவரும் தயாராகி வருகின்றனர்.
தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த, தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இதனால், பாஜக முன்பைவிட வலிமையாக வளர்ந்துள்ளது.
இந்த நிலையில், புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல, வரும் தேர்தலில் 9 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், இண்டி கூட்டணி வலிமையாக உள்ளது. இந்த வலிமையை திமுக மகளிர் உரிமை மாநாடு உணர்த்தியுள்ளது. எனக்கு கிடைத்த தகவலின்படி தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். அதே வேளையில், இந்த முறை காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளை கேட்டுப்பெறும் என்றார்.
திமுக தலைமயிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 4 அல்லது 5 சீட் மட்டுமே ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், திமுக – காங்கிரஸ் கூட்டணி உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.