காங்கிரஸ் கட்சியின் டி.என்.ஏ.விலேயே ஊழல் இருக்கிறது. காங்கிரஸும், ஊழலும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கடுமையாகத் தாக்கி இருக்கிறார்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சட்டவிரோத நிதியைப் பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிக்கும் என்று பா.ஜ.க. தலைவர்கள் பலரும் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடாக மாநிலம் பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் அஸ்வத்தம்மா மற்றும் ஒப்பந்ததாரர் அம்பிகாபதி தம்பதிக்குச் சொந்தமான வீட்டில் கட்டிலின் மெத்தைக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 42 கோடி ரூபாய் ரொக்கப் பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இதன் மூலம், பா.ஜ.க. தலைவர்கள் கூறியது உண்மை என்பது நிரூபணமாகி இருக்கிறது.
இந்த நிலையில், பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “காங்கிரஸ் கட்சி வாக்குறுதிகளை அளிப்பதில் தேர்ச்சி பெற்றிருக்கிறது. தற்போது அக்கட்சி ஒரு படி மேலே சென்று வாக்குறுதிகளுக்கு பதிலாக உத்தரவாதத்தைக் கொடுக்கத் தொடங்கி இருக்கிறது. இது சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
கர்நாடகாவில் உள்ள சில ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் வெட்கக்கேடானது மற்றும் வாக்காளர்களை கேவலப்படுத்தும் கேலிக்கூத்தானது. இது காங்கிரஸ் கட்சியின் டி.என்.ஏ.விலேயே ஊழல் இருக்கிறது என்பதற்கு ஒரு சிறிய சாம்பிள்தான்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலின்போது இதே காங்கிரஸ் ஆதரவு ஒப்பந்ததாரர்கள் பா.ஜ.க.வுக்கு எதிராக பொய்களை பரப்புவதில் தீவிரமாக இருந்தனர். இது கர்நாடகாவின் துரதிர்ஷ்டம். பண மோசடி, ஊழல் மற்றும் வரவிருக்கும் தேர்தலுக்கு பணம் திரட்டுவதற்கான ஏ.டி.எம்.மாக கர்நாடக அரசை காங்கிரஸ் மாற்றி இருக்கிறது. காங்கிரஸால் ஊழலுக்கு எப்போதும் உத்தரவாதம் அளிக்க முடியும். காரணம், காங்கிரஸும் ஊழலும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.
சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களை ஊழல் ஏ.டி.எம்.களாக மாற்றிய காங்கிரஸ் அரசு, தற்போது தெலங்கானா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் ஆட்சியைக் கைப்பற்றி ஏ.டி.எம்.களை உருவாக்கி மக்கள் பணத்தை கொள்ளையடிக்க நினைக்கிறது. ஏழைகளின் நலனுக்காகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் செலவிட வேண்டிய பணத்தை கொள்ளையடிப்பதற்கு காங்கிரஸால் மட்டுமே உத்தரவாதம் கொடுக்க முடியும்” என்று கூறியிருக்கிறார்.
कांग्रेस पार्टी को वादे करने की कला में महारत हासिल है और अब यह पार्टी एक कदम आगे बढ़कर वादों के बदले में गारंटी देने लगी है।
कर्नाटक में कतिपय ठेकेदारों के घरों से हाल ही में 100 करोड़ से अधिक की नकदी मिलने का खुलासा हुआ है जो बेहद शर्मनाक व मतदाता के साथ घिनौना मजाक है।… pic.twitter.com/0IpZCxnibL— Jagat Prakash Nadda (@JPNadda) October 16, 2023