மனிதனை நிலவுக்கு அனுப்புவது எப்போது? இஸ்ரோ தலைவர் பேட்டி!
Sep 9, 2025, 06:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மனிதனை நிலவுக்கு அனுப்புவது எப்போது? இஸ்ரோ தலைவர் பேட்டி!

சிறியவகை ராக்கெட்டுகளை ஏவ குலசேகரப்பட்டினம்தான் பெஸ்ட்!

Web Desk by Web Desk
Oct 16, 2023, 04:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மனிதர்களை நிலவுக்குக் கொண்டு செல்வதற்கு பெரிய ராக்கெட்டை தயாரிக்க வேண்டும். இப்பணிகள் 10 முதல் 12 ஆண்டுகளுக்குள் நிறைவடைந்து விட்டால், மனிதர்களை நிலவுக்குக் கொண்டு செல்லும் நிலையை எட்டி விடலாம் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியிருக்கிறார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், “கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மகேந்திரகிரியில் இஸ்ரோவின் உந்துவிசை வளாகம் இயங்கி வருகிறது. இங்குதான் ராக்கெட்டுக்கான உதிரி பாகங்களை இஸ்ரோ தயாரிக்கிறது. மேலும், திரவ இன்ஜின் சோதனை உள்ளிட்ட சிக்கலான பணிகளும் இங்குதான் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குலசேகரப்பட்டினத்தில் 2-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இந்த ஏவுதளம் அருகே இலங்கைத் தீவு இருப்பதால், ஏவப்படும் அனைத்து ராக்கெட்டுகளும் அத்தீவைச் சுற்றி செல்ல வேண்டி இருக்கிறது. இதனால், ராக்கெட்டின் பேலோடு திறன் குறைந்து விடுகிறது. இதன் காரணமாக, இங்கிருந்து சிறிய வகை ராக்கெட்டுகளை ஏவுவது சிரமமாக இருக்கிறது.

எனவே, சிறிய வகை ராக்கெட்டுகளை ஏவுவதற்கு தென் பகுதிதான் சிறந்தது. அந்த வகையில், கன்னியாகுமரியிலிருந்து ஏவினால் சிறந்ததாக இருக்கும். ஆனால், கன்னியாகுமரியில் அவ்வளவு பெரிய இடம் இல்லை. எனவே, தூத்துக்குடி குலசேகரப்பட்டினத்தில் அரசு 2,000 ஏக்கர் நிலம் ஒதுக்கி இருக்கிறது. நிலம் கையகப்படுத்தப்பட்டு விட்டது. இங்கிருந்து சிறிய வகை ராக்கெட்டுகளை ஏவுவது சிறப்பனதாக இருக்கும்.

சந்திராயன்-3 நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டிருக்கிறது. அந்த அனுபவத்தின் அடிப்படையில், அடுத்தடுத்த தரையிறக்கம் நடைபெறும். முதலில், நிலவிலிருந்து மாதிரிகள் திரும்பி வருவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு, ரோபாட் அங்கிருந்து திரும்பி பூமிக்கு வரவேண்டும். அதற்கான திட்டங்களை தயாரிக்க வேண்டும். மேலும், மனிதர்களை அனுப்ப பெரிய அளவிலான ராக்கெட்டை வடிவமைக்க வேண்டும்.

தற்போது இருக்கும் ராக்கெட்டில் மனிதனை கொண்டு செல்வதற்கான வசதிகள் இருக்காது. இதுவெறும் 4.5 டன் எடை கொண்டதுதான். ஆகவே, 12.5 டன் எடை கொண்ட ராக்கெட்டை தயாரிக்க வேண்டும். இவையெல்லாம் 10 முதல் 12 ஆண்டுகளுக்குள் நிறைவடைந்து விட்டால், மனிதர்களை அங்கு கொண்டு செல்லும் நிலையை எட்டிவிடலாம்” என்று கூறியிருக்கிறார்.

Tags: ISROSomnath
ShareTweetSendShare
Previous Post

ஹமாஸ் கோழைகளின் கூட்டம்: ஜோ பைடன் கடும் விமர்சனம்!

Next Post

27 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.74,000 கோடி திட்டங்கள் – சென்னை துறைமுகம் அதிரடி!

Related News

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

சோனியா காந்தியை, அவரது மகன் ராகுல் காந்தி அவமதித்ததாக குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies