ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடவுள்ளன.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் 13 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று 14 வது போட்டி லக்னோவில் உள்ள ஏகானா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெற்றிருக்கிறது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடவுள்ளன. இந்த உலகக் கோப்பைத் தொடரில் இரண்டு அணிகளும் 2 போட்டிகளில் விளையாடி, ஒரு போட்டியில் கூட வெற்றிப் பெறமுடியாமல் உள்ளது.
புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலியா அணி 10 வது இடத்திலும், இலங்கை அணி 8 வது இடத்திலும் உள்ளது. இரு அணிகளும் இதற்கு முன்னதாக 103 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், 63 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், 36 போட்டிகளில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன. மேலும், 4 போட்டிகளுக்கு முடிவு எடுக்கப்படவில்லை.
இதேப் போன்று உலகக் கோப்பைப் போட்டிகளில் இரு அணிகளும் 11 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 8 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது. இலங்கை 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. மேலும் ஒரு போட்டிக்கு முடிவு எடுக்கப்படவில்லை.
ஏற்கனவே காயம் காரணமாக இலங்கை அணியின் கேப்டனான தசுன் ஷனாகா அணியிலிருந்து வெளியேறிவிட்டார். அவருக்குப் பதிலாக சமீகா கருணாரத்னே அணியில் இடம் பெற்றுள்ளார். குசால் மெண்டிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வெற்றி வாய்ப்பு கணக்கெடுப்பில் ஆஸ்திரேலியா அணி 76% வெற்றி பெரும் என்றும் இலங்கை அணி 24% வெற்றி பெரும் என்றும் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது.