ஊட்டி மலை ரயிலுக்கு இன்று 115 வது பிறந்த நாள் !
Oct 17, 2026, 02:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஊட்டி மலை ரயிலுக்கு இன்று 115 வது பிறந்த நாள் !

Murugesan M by Murugesan M
Oct 16, 2023, 02:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஊட்டி மலை ரயிலுக்கு இன்று 115 வது பிறந்த நாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கடந்த 1908-ம் ஆண்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து தேயிலை, காய்கறி உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு செல்வதற்காக இந்த ரெயில் சேவை தொடங்கப்பட்டது. பின்னர் பயணிகள் ரெயிலாக மாற்றப்பட்டது. ஆண்டுதோறும் அக்டோபர் 15-ந்தேதி ஊட்டி மலை ரெயில் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகின் மிக அழகான ரயில் பயணத்தை விரும்புகிறவர்கள் பயணிக்க விரும்பும் ரயில் பயணம் ஊட்டி மலை ரயில் பயணம். நீலகிரி மலைகளின் இடுக்குகளிலும், எழில் கொஞ்சும் அடர்ந்த வன பகுதிகளிலும் நாள் தோறும் பயணிகளை ஏற்றி தவழ்ந்து செல்லும் மலை ரயில் முதன் முதலில் மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே இயக்கப்பட்டது.

அதன்பின்னர்  ஒன்பது ஆண்டுகள் கழித்து குன்னூரில் இருந்து ஊட்டி அருகேயுள்ள பெர்ன்ஹில் என்ற பகுதிக்கு இயக்கப்பட்டது.

அதன் பின் கடந்த 1909 அக்டோபர் 15-ம் தேதி ஊட்டி ரயில் நிலையம் அமைக்கப்பட்டு அது வரை இயக்கப்பட்டது. ஆசியக் கண்டத்தில் மிக நீளமான மீட்டர் கேஜ் மலை ரயில் பாதை இதுவாகும்.  இந்த ரயில் பாதை ஆசியாவிலேயே மிகவும் செங்குத்தாக இருப்பதால் பல் சக்கரத்தின் உதவியுடன் இந்த ரயில் இயக்கப்படுகிறது.

11.516 மீட்டர் நீளமும், 2.15 மீட்டர் அகலமும், 4 பெட்டிகளையும்  கொண்டுள்ளது.  மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை (46 கி.மீ.,) தூரம் கடக்க 208 வளைவுகளையும், 250 பாலங்களையும், 16 சுரங்க பாதைகளையும் கடந்த செல்கிறது. பசுமை நிறைந்த மலைகளின் நடுவே தவழ்ந்து வருகிறது. இந்த மீட்டர் கேஜ் மலை ரயில்  சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் சிறப்பு வாய்ந்த ரயிலாக திகழ்கிறது.

கடந்த 2005 ஜூலை 15-ம் தேதி டர்பன் நகரில் நடந்த உலக பாரம்பரிய குழுவின் 29வது கூட்டத்தில் நீலகிரி மலை ரயிலை யுனஸ்கோ பாரம்பரிய ரயிலாக அறிவித்தது. இதனால், இந்த ரயில் நிலையம் மற்றும் ரயில் உலக சுற்றுலா ஏட்டில் இடம் பெற்றது.

சிறப்புகள் வாய்ந்த இந்த மலை ரயிலின் 115 வது பிறந்த நாள் விழா இன்று ஊட்டி  ரயில் நிலையத்தில் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஊட்டியை மலை ரயில் வந்தடைந்தவுடன் ரயிலுக்கு  மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் தோடா சமூகத்தினர் நடனத்தை சுற்றுலாப் பயணிகளை கவர்ந்தது.

Tags: ooty train
Share
Tweet
SendShare
Previous Post

ஆஸ்திரேலியா vs இலங்கை : வெல்லப்போவது யார் ?

Next Post

மக்களே உஷார்: இந்த 3 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies