அரிகண்ட சிற்பம்: பாதுகாக்க வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை!
Mar 15, 2026, 06:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரிகண்ட சிற்பம்: பாதுகாக்க வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை!

Murugesan M by Murugesan M
Oct 16, 2023, 02:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள புதூர் பகுதியில், 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிகண்டம் சிற்பம் உள்ளிட்டவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

புதூரில் இருந்து மடப்புரம் செல்லும் வழியில், 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிகண்ட சிற்பம், பல்வேறு கால கல்வெட்டு உட்பட பல சிற்பங்கள் காணப்படுகிறது. அரிகண்டம் என்பது, மன்னன் போரில் வெற்றி பெற வேண்டியோ, நோயிலிருந்து மீளவோ காளி தேவியிடம் வேண்டிக்கொண்டு போரில் வெற்றி பெற்ற பிறகு அல்லது உடல் நலம் சரியான பிறகு தன் தலையைத் தானே அரிந்து உயிர் விடுதல் ஆகும். நவகண்டம் என்பது ஒன்பது இடங்களில் வெட்டி, உடம்பை ஒன்பது கண்டங்களாக்கி உயிரைத் துறப்பது ஆகும்.

இதுகுறித்து ஆய்வாளர் காளைராஜன் கூறியதாவது, அரிகண்ட சிற்பம் காளிக்கு வேண்டுதல் நிறைவேற தன்னைத்தானே பலி கொடுத்தலை குறிப்பதாகும். அரி என்றால் நறுக்கி என்பது அர்த்தம். அரிகண்ட சிற்பம், நவகண்ட சிற்பம் என இரு வகை சிற்பங்கள் உள்ளன.

மடப்புரத்தில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளதால், காளிக்கு பலி கொடுத்தல் குறித்த சிற்பமாக அரிகண்ட சிற்பம் இருக்க வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக, திருப்புவனகாசி என்ற நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மடப்புரம் கோவிலில் அம்மனுக்கு இருபுறமும் சித்திரசரிதன், வல்லபன் என இரு சிற்பங்கள் இருந்தன. சிரித்தபடியே தன் தலையை வெட்டுவது போல காணப்படும் இந்த இரு சிற்பங்களையும், தற்போது தனி அறையில் எடுத்து வைத்து விட்டனர் என்று கூறினார்.

திருப்பாச்சேத்தியில் வாமன அவதார நிலதான கல், சூலக்கல், பல்வேறு கால கல்வெட்டுகள், புடைப்பு சிற்பங்கள் உள்ளிட்டவை திருப்புவனம் வட்டாரத்தில் தொடர்ச்சியாகக் கிடைத்து வரும் நிலையில், அவற்றைப் பாதுகாக்க தொல்லியல் துறையினர் முன்வர வேண்டும் என, வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: Arikanda sculpture
ShareTweetSendShare
Previous Post

மக்கள் நீதிமன்றம்: பாதிக்கப்பட்டோருக்கு ரூ. 186.73 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு!

Next Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : இலங்கை பேட்டிங் !

Related News

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

Load More

அண்மைச் செய்திகள்

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies