27 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.74,000 கோடி திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகச் சென்னை துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மும்பையில் வரும் 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை இந்திய கடல்சார் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில், 10 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீட்டை ஈர்க்க மத்திய கப்பல் போக்குவரத்து இலக்கு நிர்ணயித்துள்ளது.
துறைமுகங்களை மேம்படுத்தவும், கப்பல் போக்குவரத்தில் நவீனங்களைப் புகுத்தவும் இந்த மாநாடு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.
துறைமுகங்களை நவீன மயமாக்கி ஏற்றுமதி, இறக்குமதியை அதிகரிக்கவும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கவும், அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 27 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆக மொத்தம் 74,000 கோடிக்குத் திட்டங்கள் செய்யப்பட உள்ளது. இதன் முதற்கட்டமாக 9,000 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.
இது தொடர்பாக பேசிய சென்னை துறைமுக உயர் அதிகாரி ஒருவர், தமிழகத்தில் துறைமுகங்களை நவீன மயமாக்கி ஏற்றுமதி, இறக்குமதியை அதிகரிக்கவும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கவும் முடிவு செய்துள்ளோம். இதற்கான பணிகளில் சென்னை துறைமுக அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், 27 ஒப்பந்தங்கள் மூலம் 74,000 கோடி ரூபாய்க்குத் திட்டங்கள் ஒப்பந்தங்கள் செய்யப்பட உள்ளது என்றார்.