சனாதனத்தை பற்றி பேச யாருக்கும் அருகதையே இல்லை என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரை மூன்றாம் கட்டமாக அவிநாசியில் இன்று நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய இணையமைச்சர் எல். முருகன், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய மத்திய இணை அமைச்சர் வேல்முருகன்,
இந்த யாத்திரை தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் கொண்டு வரும். இந்த யாத்திரையின் நோக்கமே திமுகவை துரத்துவது தான். எந்த வேலை வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் ஊழல் செய்யக்கூடாது.
சனாதனத்தை பற்றி பேச யாருக்கும் அருகதையே இல்லை. பிரதமர் மோடி, எண்ணற்ற மக்கள் நல திட்டங்களை கொடுத்திருக்கிறார். இந்த யாத்திரை முடியும்போது திமுக தூக்கி எறியப்படும் என தெரிவித்தார்.