மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் சென்னை எழும்பூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் குடிசைத் தொழில்களுக்கு 3 -ஏ பிரிவில் வழங்கச் சொல்லியும், தற்போது 3 -பி பிரிவில் வழங்குவதால் 500 யூனிட்டுக்கு ரூ.2,062 கூடுதலாகச்செலவாகிறது.
112 கிலோவாட் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு நிலைக் கட்டணமாக யூனிட்டுக்கு ரூ.35 ஆக இருந்தது. அது தற்போது 430 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு யூனிட்டுக்கு ரூ.150 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், ஆண்டுதோறும் 6 சதவீதம் உயர்வுடன் மின் கட்டணம் அதிகரிக்கும் என்றும், அதற்கேற்றவாறு கட்டண செலுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், சொந்த செலவில் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யும் சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள், காரணமே இன்றி தமிழக அரசுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.1.53 பைசா செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு சூரியஒளி மின்சாரத்தைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்குக் கட்டணத்தில் 20 சதவீதம் குறைக்கச் சொன்னது. ஆனால், தமிழக அரசு இதை நிறைவேற்ற முன்வரவில்லை.
மேலும், பீக் அவர்ஸ் நேரம் எனப்படும் காலை, மாலையில் 6 மணியிலிருந்து 10 மணிவரை உபயோகிக்கும் தொழில் நிறுவனங்கள் 15 சதவீதம் கூடுதலாகச்கட்டணம் செலுத்த உத்தரவிட்டது. இதனால், தமிழக அரசு உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணம் காரணமாகச் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால், மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் கடந்த 25-ம் தேதி கதவடைப்பு போராட்டம் நடத்தினர்.
உடனே, தொழில்துறையினருக்கு நல்லது செய்வது போல், அமைச்சர் தாமோ அன்பரசன் மற்றும் டிஆர்பி ராஜா ஆகியோர், தொழில்துறை நிறுவன உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் ஏற்றுக் கொண்டனர். மற்றவைகளை 3 நாளில் நிறைவற்றுவதாக உறுதியளித்தனர். ஆனால், சொன்னபடி செய்யவில்லை.
இதனால், மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் சென்னை எழும்பூரில் உண்ணா விரதப் போராட்டம் நடத்தினர். இதில், சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு நடுத்தர தொழில் நிறுவன பிரநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டம் காரணமாகத் தமிழக அரசின் உண்மை முகம் இருளில் இருந்து வெளிச்சற்கு வந்துள்ளது.