ஜம்மு காஷ்மீரில் அமலாக்கத்துறை சோதனை!
Mar 19, 2026, 04:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் அமலாக்கத்துறை சோதனை!

ஆர்.பி. அறக்கட்டளைக்கு எதிரான பண மோசடி தடுப்புச் சட்டம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 17, 2023, 06:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆர்.பி. கல்வி அறக்கட்டளைக்கு எதிரான பண மோசடி தடுப்புச் சட்ட ( பி.எம்.எல்.ஏ. ) வழக்கில், ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள 8 வளாகங்களில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தியது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லால் சிங். சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். இவரது மனைவி காந்தா அன்டோத்ரா. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான இவரும், முன்னாள் வருவாய் அதிகாரியான எஸ்.ரவீந்தர் ஆகியோர் இணைந்து ஆர்.பி. அறக்கட்டளையைத் தொடங்கினார்.

இந்த அறக்கட்டளைக்காக கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ம் தேதி முதல் ஜனவரி 7-ம் தேதிக்கு இடையில் 329 கனல்கள் நிலத்தை வாங்கி இருக்கிறார்கள். இந்த நிலம் வாங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து 2020-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்த சி.பி.ஐ., 2021-ம் ஆண்டு குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்தது.

இந்த நிலையில், ஆர்.பி. கல்வி அறக்கட்டளையின் தலைவரும், லால் சிங்கின் மனைவியுமான காந்தா அன்டோத்ரா மற்றும் முன்னாள் வருவாய் அதிகாரி ரவீந்தர் ஆகியோருக்குச் சொந்தமான ஜம்மு, கதுவா மற்றும் பஞ்சாப்பின் பதான்கோட்டில் உள்ள 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இச்சோதனை நில நன்கொடையாளர்கள், நன்கொடையாளர்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், பத்திரங்களை நிறைவேற்றிய சாட்சிகள் மற்றும் ஆர்.பி. கல்வி அறக்கட்டளையை செயல்படுத்த அனுமதித்ததற்காக தவறான முறையில் ஃபார்டுகளை வழங்கிய அப்போதைய பட்வாரி ஆகியோரின் இடங்களும் அடங்கும்.

இச்சோதனையில், டி.பி.எஸ். பள்ளிகள் மற்றும் பிற வணிக நடவடிக்கைகளுக்கு அதிகப்படியான நிலம் அறக்கட்டளையால் வாங்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை கண்டுபிடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: ED RAIDjammu kashmir
ShareTweetSendShare
Previous Post

தர்மசாஸ்தா கோவிலில் கொலு!

Next Post

கடல்சார் துறையை வலுப்படுத்த மத்திய அரசு தொடர் நடவடிக்கை!

Related News

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies