நவராத்திரியை முன்னிட்டு திருச்சூரில் உள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா கோவிலில் பக்தர்கள் சார்பில் கொலுவைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நவராத்திரி பண்டிகை ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது. மலை மகள், அலை மகள், கலை மகள் ஒரு ரூபமாக இணைந்து, மக்களுக்கு துன்பத்தை கொடுத்து வந்த மகிசாசூரனை வதைத்ததை தான் நவராத்திரி விழாவாக கொண்டாடுகின்றோம்.
இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை, அக்டோபர் 15 ம் தேதி துவங்குகி, அக்டோபர் 23 ம் தேதி சரஸ்வதி பூஜையும், அக்டோபர் 24 ம் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்பட உள்ளது. எனவே இந்த நவராத்திரி விழாவையொட்டி, கோவில்கள், வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில், கொலு வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது.
நவராத்தி பண்டிகை முன்னிட்டு கேரளாவில் உள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா கோயிலில் பக்தர்கள் சார்பில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.ஒ
இந்த கொலு கண்காட்சியில் 5 படிகளில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.
கொலுவில், சிவன் பார்வதி சிலைகள், பத்து தலை ராவணன் சிலை,
பகவான் கிருஷ்ணன் பிறந்தது போன்று சிலைகள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இராமாயண கதைகளை சொல்லும் சிலைகள் இதில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக இராமர் சீதா கல்யாணம், இராமர் படகில் செல்வது போலவும், ராவணனை எதிர்த்து நின்ற அனுமன், இராவணனை அழிக்கும் இராமர் என இராமாயண இதிகாசத்தை விவரிக்கும் பொம்மைகள் இந்த கொலுவில் இடம் பெற்றது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிக கவனத்தை ஈர்த்தது.