டெல்லி-மீரட் இடையிலான இந்தியாவின் முதல் அதிவிரைவு ரேபிட் எக்ஸ் ரயில் தடத்தின் ஒருபகுதி இணைப்பை பிரதமர் மோடி வரும் 20ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.
மொத்தம் 82 கிலோமீட்டர் தூரத்திற்கு ரேபிட் எக்ஸ் ரயிலை அறிமுகம் செய்ய பணிகள் நடந்து வருகின்றன. டெல்லி-மீரட் இடையிலான இந்தியாவின் முதல் அதிவிரைவு ரேபிட் எக்ஸ் ரயில் 17 கிலோமீட்டர் தூரம் வரை 5 ரயில் நிலையங்களை இப்பாதை கடந்து செல்கிறது. ஷாஹிபாத், காசியாபாத், குல்தார், துஹாய், மற்றும் துஹாய் டெப்போ ஆகிய 5 ரயில் நிலையங்களில் இந்த ரயில் பயணிக்க உள்ளது.
முழு அளவிலான பாதை வரும் 2025ம் தேதி தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 12ம் தேதி உத்தரப்பிரதேச முதலமைச்சர் இந்த ரயில் தடத்தின் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
ஒரு மெட்ரோ ரயில் 100 கிலோமீட்டர் தூரத்தை 3 மணிநேரத்தில் அடையும் என்றால் இந்த ரேபிட் விரைவு ரயில் அதனை ஒருமணி நேரத்திற்குள் அடைந்து விடும்.
ரேபிட் எக்ஸ் ரயில்களில் மொத்தம் 6 பெட்டிகள் இருக்கும். அதில் ஒன்று பிரீமியம் வகை பெட்டிகள். அதாவது சொகுசு வசதிகள் கொண்டதாக காணப்படும். இந்த பெட்டியில் ஏறுவதற்கு பிளாட்பாரத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். மற்றொரு பெட்டி பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 6 பெட்டிகளும் ஏசி வசதி செய்யப்பட்டிருக்கும்.
இவற்றில் ஸ்டாண்டர்டு மற்றும் பிரீமியம் வகை பெட்டிகள் இருக்கும். இருபுறமும் தலா இரண்டு இருக்கைகள் இடம்பெற்றிருக்கும். ஒரு பெட்டியில் 72 பயணிகள் வரை அமர முடியும்.
ஒவ்வொரு இருக்கையிலும் மொபைல் சார்ஜிங் வசதி, புத்தகங்கள் வைக்கும் வசதி இருக்கும். நின்று கொண்டே பயணிப்பவர்களுக்கு வசதியாக கைப்பிடிகள் அமைந்துள்ளன. இதுதவிர லக்கேஜ் வைப்பதற்கான வசதி, சிசிடிவி கேமரா, அவசர கால உதவிக்கான பட்டன், பயணிகளுக்கு உரிய தகவல்களை தெரிவிக்கும் வகையிலான மானிட்டரிங் சிஸ்டம், வைஃபை வசதி, தானியங்கி உணவுப் பொருட்கள் வழங்கும் ஏடிஎம் உள்ளிட்டவை இருக்கின்றன. கதவுகளை பயணிகளே திறக்கும் வண்ணம் பட்டன் வசதி செய்யப்பட்டுள்ளது.