லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாத முகாம்கள் மீது இஸ்ரேல் ஜெட் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.
கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனைத்தொடர்ந்து காசா மீது இஸ்ரேலிய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்பினருக்கும் 11வது நாளாக சண்டை நீடித்து வருகிறது.
இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று அந்நாட்டிற்கு செல்கிறார். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இதனிடையே லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
ஜெட் விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் கண்காணிப்பு முகாம்கள் உள்ளிட்ட இலக்குகள் தாக்கி அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.