ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை விளையாடிய போட்டிகள் மூலம் இந்திய அணியின் நிலை என்ன என்பதை பார்ப்போம் .
13 வது ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சர்வதேச நாடுகளில் இருந்து பத்து நாடுகள் பங்கேற்கின்றன.
இந்த உலகக்கோப்பைத் தொடரில் இதுவரை இந்திய அணி மூன்று போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளிலும் வெற்றிப் பெற்றுள்ளது. இதுமட்டுமின்றி 1.82 நெட் ரன் ரேட்டுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டத்தில் ரோஹித் சர்மா தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
ஆப்கானிஸ்தான்னுடன் விளையாடிய போட்டியில் ரோஹித் சர்மா 16 பௌண்டரீஸ் மற்றும் 5 சிக்சர்கள் அடித்து 131 ரன்களை விளாசினார். இது மட்டுமின்றி பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் 6 பௌண்டரீஸ் மற்றும் 6 சிக்சர்கள் அடித்து 86 ரன்களை எடுத்துள்ளார். இதன் மூலம் ரோஹித் சர்மா செம்ம பாமில் உள்ளதாக தெரியவருகிறது.
அதேபோல் விராட் கோலி, கே.எல். ராகுல், ஷ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
மேலும் பந்து வீச்சில் பும்ரா 8 விக்கெட்களைக் கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார். ஜடேஜா, ஹர்த்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 5 விக்கெட்களும், முகமது சிராஜ் 3 விக்கெட் விக்கெட்களும் வீழ்த்தி நல்ல நிலையில் உள்ளனர்.
ஆகையால் வரவிருக்கும் போட்டிகளும் இந்தியா வெற்றிப் பெரும் என்பதே இரசிகர்களின் நம்பிக்கையாக உள்ளது.