ஒட்டுமொத்த திரைத்துறையையும் கையில் வைத்துள்ளது திமுக - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!
Jun 14, 2026, 10:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒட்டுமொத்த திரைத்துறையையும் கையில் வைத்துள்ளது திமுக – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Oct 18, 2023, 06:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டாட்டாபாத் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் விருட்சம் திட்டத்தின் கீழ் குறுங்காடுகள் வளர்க்கும் திட்டத்தை துவக்கி கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தொடங்கிவைத்தார். பின்னர் பள்ளிக் குழந்தைகளுடன் சேர்ந்து வானதி சீனிவாசன் மரக்கன்று நட்டு வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், ‘’பள்ளி குழந்தைகளுக்காக கோவை தெற்கு தொகுதியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். தற்போது விருட்சம் திட்டத்தின் மூலம் கோவை மாநகராட்சியில் உள்ள 7 பள்ளிகளில் குறுங்காடுகள் வளர்க்கும் திட்டத்தை துவக்கி உள்ளோம்.

இதன் மூலம் குழந்தைகளுக்கு மரம் நடும் ஆர்வம் பொறுப்பும் உருவாகிறது. கரியமல வாயு வெளியிடு அதிகமாகி வருகிறது. இதற்கு சமமாக கார்பன் நியூட்ரல் உருவாக்க வேண்டும். இதற்கு தகுந்தாற் போல் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் மரம் நட வேண்டும். மாநகராட்சி இது மாதிரியான திட்டத்தை செயல்படுத்த வேண்டும். குறுங்காடுகள் வளர்ப்பதில் நீடித்து வளர்வது உள்ளூர் மரங்கள் மட்டுமே. சாலை விரிவாக்கத்திற்கு எடுக்கபடும் மரங்கள் இன்னொரு இடத்தில் வைக்க வேண்டும் என்பது எனது கோரிக்கை எனத் தெரிவித்தார்.

“திமுக ஃபைல்ஸ், எக்ஸ்பிரஸில் ஏறுகிறதா, ஜெட்டில் ஏறுகிறதா என்பதை பார்க்கத்தான் போகிறோம்’’ என்றார்.

மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு சொல்லி கொடுப்பதற்கு  ஆசிரியர்களே இல்லை, அடிப்படை வசதிகளும் இல்லை. டெங்கு காய்ச்சல் பரவதை தடுப்பு கொசு மருந்து அடித்ததை நான் பார்த்ததே இல்லை. எனது சட்டமன்ற அலுவலகத்தில் கொசு அடிப்பதே என்னுடைய வேலையாக இருக்கின்றது” எனத் தெரிவித்தார்.

கோவை மாநகராட்சி ஆணையாளர் மாற்றம் குறித்த கேள்விக்கு, “அரசு அதிகாரிகள் தன்னுடைய வேலையை செய்வதற்கு முன்னரே அதிகாரிகள் தொடர்ச்சியாக மாற்றப்பட்டு வருகின்றனர். அடிக்கடி அதிகாரி மாற்றத்தை கைவிட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

’லியோ’ திரைப்படம் குறித்த கேள்வி பதிலளித்த அவர், ‘’திரைத்துறை திமுக ஆட்சியில் ஆட்சியாளர்களுக்குத்தான் செழிப்பாக உள்ளது. எந்தப் படத்தை பார்த்தாலும் ரெட் ஜெயண்ட் தான்.

அதை தாண்டி யாராவது படத்தை விட்டார்கள் என்றால் அவர்களுக்கு தியேட்டர் கிடைக்காது. இதற்கு லியோ திரைப்படம் ஒரு முன்னுதாரணம்.

ஒட்டுமொத்த திரைத்துறையையும் கையில் வைத்துள்ளனர். இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னர் இப்படி இருந்ததால்தான் இவர்களின் ஆட்சி தூக்கி எறியப்பட்டது. அதே தவறைத்தான் மீண்டும் செய்து வருகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

Tags: vanathi srinivasan bjpbjp mla
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : இந்திய அணியின் நிலை !

Next Post

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. இலஞ்சம் வாங்கிய புகார்: லோக்சபா குழு விசாரணை!

Related News

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies