போலி பிறப்பு சான்றிதழ் வழக்கில் சமாஸ்வாதி கட்சி மூத்த தலைவர் அசம் கான் அவரது மனைவி தன்சீம், மகன் அப்துல்லா ஆகியோருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கி ராம்பூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அப்துல்லா ஆஸம் மீது இரண்டு பிறப்புச் சான்றிதழ்கள் வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. பாஸ்போர்ட் பெற அப்துல்லா ஆஸம் தனது முதல் பிறப்புச் சான்றிதழைப் பயன்படுத்தியதாகவும், இரண்டாவது சான்றிதழை அரசு தொடர்பான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியதாக செய்திகள் வெளியானது.
இது தொடர்பாக பாஜக எம்எல்ஏ ஆகாஷ் சக்சேனாவின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ராம்பூர் எம்பி எம்எல்ஏக்கள் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அசம் கான் அவரது மனைவி தன்சீம், மகன் அப்துல்லா ஆகிய மூவருக்கும் 7 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரு. 15,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதனையடுத்து 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.