தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கும் 5 மத்திய ஆசிய நாடுகளுக்கு இந்தியா தேவையான உதவிகளை வழங்கும் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.
இந்திய மற்றும் மத்திய ஆசிய பாதுகாப்பு உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் கஜகஸ்தானில் நடைபெறுகிறது. இதில் கஜகஸ்தான், கிர்கிஸ் குடியரசு, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாட்டு பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் பங்கேற்று உரையாற்றிய அஜித் தோவல், பயங்கரவாதம், இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலைச் சமாளிக்கும் நடவடிக்கைகளுக்காக மத்திய ஆசிய நாடுகளுக்கு இந்தியா உதவிகள் வழங்கும் என தெரிவித்தார்.
மத்திய ஆசிய நாடுகளுடன் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதில் இந்தியா சிறப்பு கவனம் செலுத்துவதையும் தோவல் கோடிட்டுக் காட்டினார்.
இந்தியா தனது பிரீமியம் யுனைடெட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) தொழில்நுட்பத்தை ஐந்து நாடுகளுக்கும் இலவசமாக வழங்க உள்ளதாக தோவல் விருப்பம் தெரிவித்தார்.
யுபிஐயை இயக்குவது வணிக ரீதியான தொடர்பை மேம்படுத்துவதோடு வணிகர்கள், மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்குச் செல்பவர்கள் மற்றும் மத்திய ஆசியாவில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கும் பயனளிக்கும் என்று டோவல் குறிப்பிட்டார்.