இஸ்ரேலில் இருந்து நேபாளிகளை வெளியேற்றியதற்காக நேபாள அமைச்சர் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நேபாளத்தைச் சேர்ந்த 18 குடிமக்கள் உட்பட 286 இந்திய குடிமக்களை ஏற்றிக்கொண்டு ஐந்தாவது விமானம் செவ்வாய்க்கிழமை இரவு புது தில்லியை வந்தடைந்தது. அவர்களை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் வரவேற்றார்.
Your Excellency @DrSJaishankar , we appreciate this help in difficult time. Nepal and Nepali people are thankful. https://t.co/0j5dO31Cqw
— NP Saud (@NPSaudnc) October 17, 2023
இஸ்ரேலில் இருந்து நேபாளத்தைச் சேர்ந்த 18 குடிமக்களை தாயகம் அழைத்து வந்ததற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தனது நன்றியை நேபாள வெளியுறவு அமைச்சர் என்.பி சவுத், தெரிவித்துள்ளார். மேலும் இந்த உதவி பாராட்டத்தக்கது என்றும் கூறியுள்ளார். மேலும் கடினமான நேரத்தில் இந்த உதவியை நாங்கள் பாராட்டுகிறோம். நேபாளம் மற்றும் நேபாள மக்கள் இதற்கு நன்றி தெரிவித்து இருக்கின்றனர் என்று தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.