கர்நாடக துணை முதல்வர் சிவக்குமாருக்கு எதிராக, சி.பி.ஐ., தொடர்ந்த சொத்து குவிப்பு வழக்கில், கர்நாடகா உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் சிபிஐ 3 மாதத்தில் விசாரணையை நிறைவு செய்யவேண்டும், வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து டி.கே.சிவகுமார் தொடர்ந்த மனுவைதள்ளுபடி செய்துள்ளது.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மாநில துணை முதல்வராக சிவக்குமார் பதவி வகித்து வருகிறார். இவர், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக பதவி வகித்த போது, பெங்களூரில் உள்ள இவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணையை துவங்கியது.
கர்நாடகாவில், கடந்த 2013 முதல் 2018-ம் ஆண்டு வரை நடந்த முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசில் எரிசக்தி துறை அமைச்சராக இருந்த தற்போதைய துணை முதல்வர் டி.கே.சிவகுமார், அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்ததாக புகார்கள் எழுந்தன.
இதனைத்தொடர்ந்து, கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், டி.கே.சிவகுமார் தொடர்புடைய 70க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதன் அடிப்படையில், வருமானத்திற்கு அதிகமாக, ரூ.74.93 கோடிக்கு சொத்து சேர்த்ததாக டிகே சிவகுமார் மீது, சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இதன் அடிப்படையில் 2020ல் சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் சிவக்குமார் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் சி.பி.ஐ., தனக்கு எதிராக தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தொடர்ந்த மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேலும், இந்த வழக்கில் சிபிஐ 3 மாதத்தில் விசாரணையை நிறைவு செய்யவும், ஏற்கனவே இந்த வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியும் கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.