திறமையான இந்திய இளைஞர்களுக்கான தேவை உலகளவில் அதிகரித்து வருகிறது - பிரதமர் மோடி!
Jan 14, 2026, 05:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திறமையான இந்திய இளைஞர்களுக்கான தேவை உலகளவில் அதிகரித்து வருகிறது – பிரதமர் மோடி!

மகாராஷ்டிராவில் 511 பிரமோத் மகாஜன் கிராமிய திறன் மேம்பாட்டு மையங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

Murugesan M by Murugesan M
Oct 20, 2023, 11:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிராவில் 511 பிரமோத் மகாஜன் கிராமிய திறன் மேம்பாட்டு மையங்களை பிரதமர்  நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். மகாராஷ்டிராவின் 34 கிராமப்புற மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ள இந்த மையங்கள் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக பல்வேறு துறைகளில் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டங்களை நடத்தும்.

நவராத்திரியின் 5-வது நாள் ஸ்கந்த மாதாவை வணங்குவதாகக் கூறி பிரதமர் தனது உரையைத் தொடங்கினார்.

ஒவ்வொரு தாயும் தங்கள் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியும், வெற்றியும் கிடைக்க வேண்டும் என்று விரும்புவதாகக் குறிப்பிட்டார். கல்வி மற்றும் திறன் மேம்பாட்டின் மூலம் மட்டுமே இது சாத்தியமாகும் என்பதை சுட்டிக் காட்டினார்.

மகாராஷ்டிராவில் 511 பிரமோத் மகாஜன் கிராமிய திறன் மேம்பாட்டுமையங்கள்     நிறுவப்பட்டிருப்பது, இது மில்லியன் கணக்கான இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்கான ஒரு பெரிய படியாகும் என்றும் இந்த நாளை மறக்க முடியாத ஒன்றாக மாற்றுகிறது என்றும் குறிப்பிட்டார்.

திறன் வாய்ந்த இந்திய இளைஞர்களின் தேவை உலகளவில் அதிகரித்து வருவதாக பிரதமர் கூறினார். பல நாடுகளின் மக்கள் தொகையில் வயது வரம்பு அதிகரித்து வருவதைக் குறிப்பிட்ட பிரதமர், சுமார் 40 லட்சம் திறமையான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க 16 நாடுகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறும் ஒரு ஆய்வைக் குறிப்பிட்டார்.

“இந்தியா தனக்காக மட்டுமல்லாமல், உலகிற்கும் திறமையான நிபுணர்களை தயார் செய்து வருகிறது” என்று கூறினார். மகாராஷ்டிராவில் உள்ள திறன் மையங்கள் உள்ளூர் இளைஞர்களை உலகளாவிய வேலைகளுக்கு தயார்படுத்தும் என்றும், கட்டுமானம், நவீன வேளாண்மை, ஊடகம், பொழுதுபோக்கு, மின்னணுவியல் ஆகியவற்றில் அவர்களுக்கு திறன் அளிக்கும் என்றும் அவர் கூறினார்.

அடிப்படை வெளிநாட்டு மொழித் திறன்கள், மொழி விளக்கத்திற்கான செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்துதல் போன்ற மென்திறன்களில் பயிற்சி அளிக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.

கடந்த அரசுகள் திறன் மேம்பாட்டில் தொலைநோக்குப் பார்வையும் தீவிரமும் கொண்டிருக்கவில்லை என்றும், இதன் விளைவாக இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு திறன்களின் பற்றாக்குறை காரணமாக வேலை வாய்ப்புகள் குறைந்துவிட்டன என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசு திறன் மேம்பாட்டின் அவசியத்தை புரிந்துகொண்டு, தனக்கென ஒரு தனி அமைச்சகத்தை அதன் சுய வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடு மற்றும் பல திட்டங்களுடன் உருவாக்கியது என்பதை சுட்டிக் காட்டினார்.

திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 1 கோடியே 30 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பல்வேறு துறைகளின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பிரதமரின் திறன் மேம்பாட்டு மையங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சமூக நீதியை மேம்படுத்துவதில் திறன் மேம்பாட்டு முயற்சிகளின் பங்களிப்பை பிரதமர் சுட்டிக்காட்டினார். தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மக்களின் மேம்பாட்டிற்காக தொழில்மயமாக்கலில் கவனம் செலுத்திய பாபாசாகேப் அம்பேத்கரின் தத்துவத்தை குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் திறமையின்மை காரணமாக, இந்தப் பிரிவினர் தரமான வேலைகளைப் பெறுவதற்கான வாய்ப்பை இழந்தனர். அரசின் திறன் மேம்பாட்டு முயற்சிகளால் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின குடும்பங்கள் அதிக பயன் பெறுகின்றன என்றார்.

பெண் கல்வி என்று வரும்போது சமூகத்தின் தடைகளை  உடைப்பதில் சாவித்ரி பாய்ஃபுலேவின் பங்களிப்பை நினைவுகூர்ந்தார். அறிவும் திறமையும் உள்ளவர்களால் மட்டுமே சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்று மீண்டும் வலியுறுத்தினார்.

பெண் கல்வி மற்றும் பயிற்சிக்கு அரசு முக்கியத்துவம் அளிப்பதன் பின்னணியில் சாவித்ரி பாய்ஃபுலே உத்வேகம் அளித்துள்ளார் என்று சுட்டிக்காட்டினார். மகளிருக்கு பயிற்சி அளிக்கும் சுய உதவிக் குழுக்கள் பற்றி குறிப்பிட்ட அவர், மகளிர் அதிகாரமளித்தல் திட்டத்தின் கீழ் 3 கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார். வேளாண் நிலங்கள் மற்றும் பிற துறைகளில் ட்ரோன்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க பெண்களுக்கு பயிற்சியளிப்பதையும் அவர் குறிப்பிட்டார்.

கிராமங்களில் பாரம்பரியமாக முன்னெடுக்கப்பட்டு வரும் தொழில்கள் குறித்து  குறிப்பிட்டார். முடிதிருத்தும் தொழிலாளி, தச்சர், சலவைத் தொழிலாளி, பொற்கொல்லர் அல்லது இரும்புத் தொழிலாளி போன்ற தொழில்களுக்கு உதவுவதற்காக தொடங்கப்பட்ட பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் பற்றி பேசினார்.

இதன் கீழ், பயிற்சி, நவீன உபகரணங்கள் மற்றும் நிதி உதவிகள் வழங்கப்படுவதாக பிரதமர் தெரிவித்தார். இதற்காக அரசு 13,000 கோடி ரூபாய் செலவிடுகிறது, மகாராஷ்டிராவில், 500-க்கும் மேற்பட்ட திறன் மையங்கள் இதை மாநிலத்தில் முன்னெடுத்துச் செல்லும் என்றும் அவர் கூறினார்.

திறன் மேம்பாட்டிற்கான இந்த முயற்சிகளுக்கு மத்தியில், நாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையிலான திறன்களை மேம்படுத்த வேண்டிய துறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

இந்தியாவின் உற்பத்தித் துறையில் குறைபாடுகள் இல்லாத நல்ல தரமான தயாரிப்புகளின் தேவையை அவர் சுட்டிக்காட்டினார். மேலும் புதிய திறன்கள் தேவைப்படும் தொழில்துறை 4.0-யையும் குறிப்பிட்டார்.

சேவைத் துறை, அறிவுசார் பொருளாதாரம் மற்றும் நவீன தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு புதிய திறன்களை அரசுகள் வலியுறுத்த வேண்டும் என்று அவர் கூறினார். நாட்டை தற்சார்பை நோக்கி அழைத்துச் செல்லும் உற்பத்திக்கான தயாரிப்புகள் எவை என்பதைக் கண்டறியவும் பிரதமர் வலியுறுத்தினார்.

அத்தகைய தயாரிப்புகளை தயாரிக்கத் தேவையான திறன்களை நாம் ஊக்குவிக்க வேண்டும் என்று கூறினார். நாட்டின் வேளாண் துறைக்கு புதிய திறன்களின் அவசியத்தை வலியுறுத்தினார். பூமித் தாயைப் பாதுகாக்க இயற்கை வேளாண்மை முறையை வலியுறுத்தினார்.

சீரான நீர்ப்பாசனம், வேளாண் தயாரிப்பு செயலாக்கம், பொருட்கள் கட்டுமானம், வணிக அடையாளம் மற்றும் ஆன்லைன் உலகத்துடன் இணைக்க மக்களை திறன் படுத்துவதற்கான திறன்களின் தேவை குறித்து அவர் பேசினார். “நாட்டின் பல்வேறு அரசுகள் தங்கள் திறன் மேம்பாட்டிற்கான எல்லையை மேலும் விரிவுபடுத்த வேண்டும்” என்று மோடி கூறினார்.

திறமைகள் மூலம், அவர்கள் தங்கள் குடும்பங்களுக்கும் நாட்டிற்கும் நிறைய பங்களிக்க முடியும் என்பதால் அவர்கள் சரியான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று  பயிற்சியாளர்களிடம் உறுதியளித்தார்.

உழைப்பின் கண்ணியத்தை அங்கீகரிப்பதும், திறமையான வேலையின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதும் சமூகத்தின் கடமை என்று  கூறினார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

வங்கதேசத்தை தெறிக்க விட்ட இந்தியா !

Next Post

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies