இந்தியாவின் அட்டாரி வாகா எல்லையில், 418 அடி உயரத்தில், மூவர்ணக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
இந்திய – பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியான அட்டாரி – வாகாவில், 418 அடி உயரத்தில் இந்தியாவின் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. இந்தியாவின் மிக உயரமான மூவர்ணக் கொடியை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பஞ்சாப் முதல்வர், இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதே பகுதியில் 400 அடி உயரத்தில் பாகிஸ்தானின் தேசியக் கொடி உள்ளது. வாகா எல்லை பகுதியில் ஏற்றப்பட்டுள்ள இந்தியாவின் தேசியக் கொடியானது, பாகிஸ்தான் ஏற்றியுள்ள தேசிய கொடியை விட, 18 அடி அதிக உயரம் கொண்டது குறிப்பிடத்தக்கது.