மணல் குவாரியில் E.D சோதனை: 1.5 லட்சம் லோடு மணல் எங்கே?
Mar 15, 2026, 05:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணல் குவாரியில் E.D சோதனை: 1.5 லட்சம் லோடு மணல் எங்கே?

Murugesan M by Murugesan M
Oct 20, 2023, 07:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில்,1.5 லட்சம் கணக்கில் வராத மணல் லோடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில தினங்களாக மணல் கடத்தல், மணல் குவாரிகளில் முறைகேடு உள்ளிட்ட வழக்குகள் அடிப்படையில், திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன், கரிகாலன் மற்றும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர் வெங்கடேஷ் உள்ளிட்டோருக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.

அத்துடன், மணல் குவாரி அதிபர்கள் தொடர்புடைய சென்னை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், நாமக்கல் என 30 -க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர். குறிப்பாக, சென்னையில் கனிமவளம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களிலும், அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ. 15 கோடி ரொக்கம் பணம், மேலும், ஒரு கிலோ தங்கம் மற்றும் ஏராளமான ஆவணங்களும் பறிமுதல் செய்தனர்.

இதனால், மணல் குவாரி அதிபர்கள் ரத்தினம், கரிகாலன், ராமச்சந்திரன் ஆகிய மூன்று பேரும் தற்போது வரை தலைமறைவாக உள்ளனர்.

இதனிடையே, கரூர், அரியலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது, ஆற்றில் எவ்வளவு மணல் அள்ளப்பட்டது? ஒரு அடி மற்றும் ஒரு மீட்டர் ஆழத்தில் எவ்வளவு மண் எடுக்க முடியும்? ஒரு நாளைக்கு எத்தனை லாரிகளில் மண் அள்ளியுள்ளனர்? அரசு நிர்ணயித்த அளவைவிட எவ்வளவு கூடுதலாக வாங்கினார்கள்? எனப் பல திசைகளிலும் விசாரணை நடத்தினர். இதில், பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சோதனையில், 1.5 லட்சம் கணக்கில் வராத மணல் லோடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக நீர்வளத்துறை அதிகாரிகளிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: ED RAID
ShareTweetSendShare
Previous Post

இலஞ்சம் வாங்கிய திரிணாமுல் எம்.பி: ஒப்புக்கொண்ட தொழிலதிபர் – சிக்கலில் திரிணாமுல் காங்கிரஸ்!

Next Post

செல் போனில் திடீர் எச்சரிக்கை மணி – என்ன காரணம்?

Related News

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Load More

அண்மைச் செய்திகள்

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies