தெலங்கானா சட்டபேரவைத்தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு தக்க பாடம் கற்பிக்கப்படும் என அமைச்சர் கே.டி.ராமா ராவ் தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 30-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 3-ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது.
இதையடுத்து, தெலங்கானாவில் தேர்தல் பரப்புரை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிஆர்எஸ் மூத்த தலைவரும், அமைச்சருமான கே.டி.ராமா ராவ் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வீட்டுப்பாடம் செய்யாமல் உள்ளூர் தலைவர்களின் ஸ்கிரிப்டைப் படித்துவிட்டு திரும்பிச் செல்லும் தலைவர் என்று கூறினார். ரா.குல் காந்தியை ஒரு தலைவராக கருதவில்லை அவரை ஒரு வாசிப்பாளராகவே கருதுகிறேன். அவர் வீட்டுப்பாடம் செய்யாமல் உள்ளூர் தலைவர்களின் ஸ்கிரிப்டைப் படித்துவிட்டு செல்கிறார்.
உள்ளூர் தலைவர்கள் எழுதிக்கொடுக்கும் ஸ்கிரிப்பிட்டில் என்ன இருக்கிறது என்று கூட அவர் பார்ப்பதில்லை என்றும் அவர் கூறினார். நிழலுக தாதா தாவூத் இப்ராகிம், சார்லஸ் சோப்ராஜை விட தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி அபாயமானவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு தெலங்கானா மாநிலம் தேர்தலில் கற்றுக்கொடுத்து அவரை டெல்லிக்கு அனுப்பும் எனறும் கே.டி. ராமா ராவ் குறிப்பிட்டார்.