"நமோ பாரத்" இரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
Oct 18, 2026, 01:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“நமோ பாரத்” இரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 20, 2023, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

“நமோ பாரத்” என்ற பெயரிலான இந்தியாவின் முதல் பிராந்திய விரைவு இரயில் சேவையை (ரேபிடக்ஸ்) பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

டெல்லியை மையமாகக் கொண்டு சுற்றியுள்ள நகரங்களை விரைவு இரயில் சேவை (ரேபிடக்ஸ்) மூலம் இணைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த இரயில் சேவைக்கு “நமோ பாரத்” என்று பெயரிடப்பட்டது. இத்திட்டத்தின் முதல்கட்டமாக டெல்லியில் இருந்து காசியாபாத் வழியாக மீரட் வரை செல்லும் இரயில் சேவை இன்று தொடங்கப்பட்டது. இந்த இரயில் சேவையை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலம் சாஹிபாபாத்தில் இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, இரயிலில் பயணித்த பிரதமர் மோடி, பள்ளிக் குழந்தைகள் மற்றும் பணியாளர்களுடன் உரையாடினார். இந்த இரயில் முதல்கட்டமாக சாஹிபாபாத், காசியாபாத், குல்தார், துஹாய் மற்றும் துஹாய் டிப்போ ஆகிய 5 ரயில் நிலையங்களை உள்ளடக்கிய டெல்லி-காசியாபாத்-மீரட் இடையே 17 கிலோ மீட்டர் தொலைவுக்கு இயக்கப்படும். மொத்தம் 82 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இப்பாதையில், தற்போது பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகள் 2025-ம் ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு இரயில் சேவை முழுமையாகத் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  82 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த தூரத்தை நமோ பாரத் இரயில் 1 மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் கடக்கும். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த இரயில், மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கக் கூடியது. எனினும், தற்போது 160 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் மட்டுமே இயக்கப்படும். இத்திட்டம் நாட்டின் நகர்ப்புற வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாகத் திகழும் என்று மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்திருக்கிறார்.

முழுமையாக ஏ.சி. வசதி செய்யப்பட்ட இந்த இரயில், பாதுகாப்பானதாகவும், சொகுசு நிறைந்ததாகவும் இருக்கும். உதாரணமாக, இரயில் பெட்டியில் பயணிகள் படிப்பதற்காக நாளிதழ்கள், புத்தகங்கள் மற்றும் கால்கள் வைக்கும் இடத்தில் மிதியடி உள்ளிட்ட வசதிகள் இருக்கும். இதில் ஒரு பெட்டி பிரிமியம் பெட்டியாகவும், ஒரு பெட்டி மகளிருக்கானதாகவும் இருக்கும். கடைசி பெட்டியில் வீல் சேர் அல்லது ஸ்டெரெச்சர் மூலம் பயணிகள் ஏறும் வகையில் வசதிகள் செய்யப்பட்டிருக்கும். இத்திட்டம் 30,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

Tags: PM ModiInaguratesDelhi-meerutNamo Bhart Express
Share
Tweet
SendShare
Previous Post

 2027-28 ஆம் ஆண்டிற்குள் ரூ. 50,000 கோடி வணிகத்தை அடையவேண்டும்! – அமித்ஷா.

Next Post

தெலங்கானா மாநிலம் ராகுல் காந்திக்கு தக்க பாடம் கற்பிக்கும்!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies