‘சமத்துவம் சர்வதேச விதிமுறைகளை மீறவில்லை என கனடாவுக்கு இந்தியா பதிலடி அளித்துள்ளது.
இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே சமீப காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் சுட்டுக்கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினார்.
கனடாவில் 21 இந்திய தூதரக அதிகாரிகள் பணியாற்றி வரும் நிலையில் இந்தியாவில் 62 கனடா தூதரக அதிகாரிகள் பணியாற்றி வந்தனர். இதனால், தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை 21 ஆக குறைக்கும்படியும், எஞ்சிய அதிகாரிகளை உடனடியாக திரும்பப்பெறும்படியும் கனடாவுக்கு மத்திய அரசு கெடு விதித்தது. அக்டோபர் 20ம் தேதிக்குள் (இன்று) தூதரக அதிகாரிகளை திரும்பப்பெறவில்லை என்றால் அவர்களின் தூதரக அந்தஸ்து பறிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்தது.
இந்நிலையில், இந்தியாவில் இருந்து 41 தூதரக அதிகாரிகளை கனடா திரும்பப்பெற்றுள்ளது. 41 தூதர்களும் குடும்பத்துடன் இந்தியாவில் இருந்து வெளியேறியுள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் உள்ள கனடா தூதர்களின் எண்ணிக்கை 21 ஆக குறைந்துள்ளது.
மேலும், இந்தியாவில் இருக்கும் தங்கள் நாட்டு குடிமக்கள் கவனமுடன் இருக்கும்படியும் கனடா எச்சரித்துள்ளது.
இதனிடையே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்திக்குறிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 19ஆம் தேதி கனடா அரசு வெளியிட்ட அறிக்கையை பார்த்தோம். இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கனடா தூதர்கள் உள்ளனர். அளவுக்கு அதிகமாக அவர்கள் உள்ளதால் இந்தியாவின் உள்விவகாரங்களில் அவர்கள் தலையிடும் நிலை உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஒரு மாதமாக கனடா தரப்புடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், “அதைச் செயல்படுத்துவதற்கான விவரங்கள் மற்றும் வழிமுறைகளை உருவாக்குவதற்காக ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை எங்கள் நடவடிக்கைகள் தூதரக உறவுகள் மீதான வியன்னா மாநாட்டின் 11.1 வது பிரிவுடன் முழுமையாக ஒத்துப்போகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.