ஆவின் பால் கொள்முதல் குறைந்து கொண்டே வருவது தமிழ்நாட்டிற்கு நல்ல செய்தி அல்ல! - வானதி சீனிவாசன் .
Sep 10, 2026, 08:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆவின் பால் கொள்முதல் குறைந்து கொண்டே வருவது தமிழ்நாட்டிற்கு நல்ல செய்தி அல்ல! – வானதி சீனிவாசன் .

Murugesan M by Murugesan M
Oct 20, 2023, 07:56 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆவின் பால் கொள்முதல் குறைந்து கொண்டே வருவது ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும், கிராமங்கள் தோறும் மேய்ச்சல் நிலங்களை உருவாக்க வேண்டும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன்  தெரிவித்துள்ளார்.

இது குறுத்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆவின் சார்பில் கடந்த செப்டம்பர் மாதம், சராசரியாக தினசரி 29 லட்சத்து 46 ஆயிரம் லிட்டல் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் நடப்பு அக்டோபர் மாதத்தில், 29 லட்சம் லிட்டருக்கும் குறைவாகவே பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் 11-ம் தேதி 28 லட்சத்து 35 ஆயிரம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த செப்டம்பர் மாத சராசரியைவிட 1 லட்சத்து 11ஆயிரம் லிட்டர் குறைவாகும். இதனால், “பால் கொள்முதலை அதிகரிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

தீவிர பால் கொள்முதல் இயக்கத்தை தொடங்க வேண்டும். பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும்” என, 27 பால் உற்பத்தியாளர் ஒன்றிய பொது மேலாளர்களுக்கு, ஆவின் நிர்வாக இயக்குநர் கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வருகின்றன.

ஆவின் பால் கொள்முதல் குறைந்து கொண்டே வருவது தமிழ்நாட்டிற்கு நல்ல செய்தி அல்ல. இது வரப்போகும் ஆபத்தின் அறிகுறி. ஆவின் பால் கொள்முதல் குறைந்தால், ஆவின் பால் மற்றும் தயிர், வெண்ணெய், நெய் போன்ற பால் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும்.

விலையும் உயரும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி தனியார் பால் நிறுவனங்கள் விலையை ஏற்றும். இதனால் ஏழை, நடுத்தர மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். பால் மற்றும் பால் பொருட்கள் மக்களின் அத்தியாவசியத் தேவை, குழந்தைகளுக்கு அத்தியாவசியமானது என்பதால் இதில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

ஆவின் பால் கொள்முதல் குறைவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. சமூக, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள்தான் பெரும்பாலும் கறவை மாடுகளை வளர்க்கின்றனர். அவர்களை நம்பிதான் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. ஆனால், மாடுகள் வளர்ப்பு என்பது இப்போது மிகவும் சவாலானதாக மாறிவிட்டது.

மாடுகள் வளர்ப்போர் சமூக, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டோர் என்பதால் அவர்களுக்கு மேய்ச்சல் நிலம் இருக்காது. முன்பெல்லாம் கிராமங்களில் விவசாயம் செய்யப்படாத தரிசு நிலங்கள் பெரும் பரப்பில் இருக்கும்.

அங்கு யார் வேண்டுமானாலும் ஆடு, மாடுகளை மேய்க்கலாம். இப்போது கிராமங்களில் தரிசு நிலங்கள் கூட வீட்டுமனைகளாகி விட்டன. ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அரசு புறம்போக்கு நிலங்களை மேய்ச்சலுக்கு பயன்படுத்த நிலை ஏற்பட்டுள்ளது.

தீவனம், வைக்கோல் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால், பாலுக்கு மட்டும் நியாயமான விலை கிடைப்பதில்லை. இதனால் பலர் மாடுகள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. மானிய விலையில் கறவை மாடுகள் வழங்குதல், கிராமங்களில் அரசு புறம்போக்கு நிலங்களை அடையாளம் கண்டு மேய்ச்சல் நிலங்களாக மாற்றுதல், மானிய விலையில் தீவனம், பால் கொள்முதல் விலை உயர்வு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால் ஆவின் பால் கொள்முதல் அதிகரிக்கும்.

மாடுகள் வளர்க்கும் ஏழைகளும் பயன்பெறுவார்கள். எனவே, இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு..க.ஸ்டாலின் தலையிட்டு ஆவின் பால் கொள்முதல் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: aavinproductsvanathi srinivasan bjpaavin milk
Share
Tweet
SendShare
Previous Post

விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுப்பதே நாட்டின் குறிக்கோள்!- குடியரசுத் தலைவர்.

Next Post

இருதரப்பு உறவில் சர்வதேச விதிமுறைகளை மீறவில்லை!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies