சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் அக்டோபர் 22 ம்தேதி நடைபெறவுள்ள ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதியளிக்க மறுத்த காவல்துறை அதிகாரிகள் மீது ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் மூலமாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளனர்.
விஜய தசமி நாளை முன்னிட்டு வரும் 22 மற்றும் 29ஆம் தேதிகளில் தமிழகத்தின் 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்ந வழக்கை விசாரித்த நீதிமன்றம், அணிவகுப்புக்கு அனுமதி அளிக்க மறுத்ததற்கு போலீசார் கூறிய காரணங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல எனக் கூறி, அணிவகுப்புக்கு அனுமதி வழங்கும்படி மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டார்.
உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள நிபந்தனைகளைப் பின்பற்றி அணிவகுப்பு நடத்தலாம் என்றும் அணிவகுப்பு நடத்த அரசியல் சாசனம் அனுமதி அளித்துள்ள நிலையில் அதற்குத் தடை விதிக்க முடியாது என கூறிய நீதிபதி, அமைதியான முறையில் பேரணி நடத்த வேண்டுமெனவும், அணிவகுப்புக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் அனுமதி மறுத்த நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 11 பகுதிகளில் உள்ள காவல்துறை ஆய்வாளர் முதல் DGP உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.