எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறையில் இந்தியா வளர்ந்து வருவதாக மத்திய ன்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கூகுள் நிறுவனம் தனது பிக்சல் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, நாட்டின் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி நாட்டில் மிகக் குறைவாக இருந்தது. மொபைல் உற்பத்தி நடைமுறையில் இல்லை, நாம் பயன்படுத்திய மொபைல் போன்களில் கிட்டத்தட்ட 98 சதவீதம் இறக்குமதி செய்யப்பட்டவை.
ஒன்பது ஆண்டு குறுகிய காலத்தில், பிரதமர் மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’, ‘மேக் இன் இந்தியா’ மற்றும் ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ ஆகிய திட்டங்கள் இந்தியாவை வளர்ச்சியை நோக்கி எடுத்து சென்றுள்ளது.
கூகுளின் அறிவிப்பு குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வைஷ்ணவ், “நடைமுறையில் ஒவ்வொரு பெரிய எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர்களும் இந்தியாவில் அதன் வடிவமைப்பை அமைத்து வருகின்றனர்” என்றார். நாட்டில் உள்நாட்டு உற்பத்தியாளர்களும் அதிகரித்து வருவதாகவும் கூறினார்.
இது மிகப் பெரிய சாதனை என்றும், பெரிய உற்பத்தியாளர்கள் இந்தியாவில் தங்கள் தளத்தை அமைப்பது என்பது ஒட்டுமொத்த அமைப்பும் வளர்ச்சி அடைந்துள்ளதை காட்டுவதாகவும் அவர் கூறினார்.